UNESCO: கலாசார பாரம்பரிய பட்டியலில் குஜராத் ’கர்பா' நடனம்; அங்கீகரித்த யுனெஸ்கோ: மகிழ்ச்சியில் பிரதமர் மோடி!
குஜராத்தின் பாரம்பரிய நடமான 'கர்பா' நடனத்தை கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
UNESCO: குஜராத்தின் பாரம்பரிய நடமான 'கர்பா' நடனத்தை கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
கர்பா நடனம்:
இந்தியாவில் பெருவாரியான மக்கள் சரஸ்வதி பூஜை, நவராத்திரி , தீபாவளி , விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல விழாக்களை ஒருமித்தே கொண்டாடுகின்றனர். குறிப்பாக நவராத்திரி என்பது வட இந்தியாவில்தான் மிகவும் பிரபலம். 9 நாட்கள் 9 தேவிகள் என நடத்தப்படும் பூஜையின் ஒவ்வொரு நாள் இரவு பொதுமக்கள் ஒன்றுக்கூடி கொண்டாடுவார்கள். இந்த 9 நாட்களில் துர்க்கா தேவியை மையமாக வைத்து, ஒன்பது சக்தி வடிவ தெய்வங்களை பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும். பாடல்களுடன் பெண்கள், ஆண்கள் என அனைவரும் ஒன்றுக் கூடி கர்பா நடனம் ஆடி மகிழ்வார்கள். பெரிய திடல்களில் குழுவாக இணைந்து கலாச்சார ஆடை அணிந்து கர்பா நடனம் ஆடுவார்கள். திடல்கள் மட்டுமின்றி, தெருக்கள், கோயில்களிலும் கர்பா நடனங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
உலக அங்கீகாரம் பெற்ற குஜராத் கர்பா நடனம்
நவராத்திரி முழுவதும் இந்த நடன கொண்டாட்டங்கள் தொடரும். இந்த நடன ஆர்பரியத்தில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் குவிகின்றனர். வட மாநிலங்களில் பலவற்றில் கர்பா நடனம் ஆடப்பட்டாலும் முக்கியமாக, குஜராத் மாநிலத்தில் கர்பா நடனம் புகழ் பெற்றது. இப்படி, குஜாரத்தின் பாரம்பரிய நடமான 'கர்பா' கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் யுனெஸ்கோ உலகளவில் உள்ள கலாசார மரபு மற்றும் கலைகளை ஆராய்ந்து கலாசார பாரம்பரிய பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான பட்டியல் வெளியீட்டின் 18வது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 'கர்பா’ நடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,குஜராத்தின் பாரம்பரியமான 'கர்பா' நடனத்தை கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி பெருமிதம்:
Garba is a celebration of life, unity and our deep-rooted traditions. Its inscription on the Intangible Heritage List showcases to the world the beauty of Indian culture. This honour inspires us to preserve and promote our heritage for future generations. Congrats for this global… https://t.co/9kRkLZ1Igt
— Narendra Modi (@narendramodi) December 6, 2023
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது, "கர்பா என்பது வாழ்க்கை, ஒற்றுமை மற்றும் நமது ஆழமான வேரூன்றிய மரபுகளின் கொண்டாட்டமாகும். இது பாரம்பரியப் பட்டியலில் இணைத்தது இந்திய கலாச்சாரத்தின் அழகை உலகுக்குக் காட்டுகிறது. கர்பா நடனத்திற்கு உலக அங்கீகாரம் பெற்றது, வருங்கால சந்ததியினருக்கு நமது பாரம்பரியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உணர்த்தப்படுகிறது. கர்பா நடனம் உலகளாவிய அங்கீகார பெற்றதற்கு வாழ்த்துக்கள்” என்றார்.