மேலும் அறிய

Gujarat Election 2022: தொடர்ந்து ஏழாவது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக! கணித்த ஏபிபி - CVoter!

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.74% வாக்குகள் பதிவாகிய நிலையில், பிற்பகல் 3 மணி வரை  50.51% வாக்குகள் பதிவாகி இருந்தது. 

குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கப்போவதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சமீபத்திய ABP-CVoter கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் அடிப்படையில் பாஜக 49.4 சதவீத வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2017 குஜராத் தேர்தலில் பெற்றதை விட 0.4 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ABP-CVoter கருத்துக்கணிப்பு:

மொத்த தொகுதிகள்: 182

கட்சிகள்     முன்னிலை/ வெற்றி 
பாஜக 128 முதல் 140
காங்கிரஸ் 31 முதல் 43
ஆம் ஆத்மி 3 முதல் 11
மற்றவை 2 முதல் 6

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 93 தொகுதிகளில் 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அகமதாபாத், காந்திநகர், வதோதரா உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது. 

5 மணிக்கு முன்னதாகவே வாக்குச்சாவடி வளாகத்துக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.74% வாக்குகள் பதிவாகிய நிலையில், பிற்பகல் 3 மணி வரை  50.51% வாக்குகள் பதிவாகி இருந்தது. 

இந்தநிலையில், குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2ம் கட்ட தேர்தலில் 67% வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 1ம் தேதி நடந்த 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தலில் 63.31% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, 128-140 இடங்களுக்கு இடையில் எங்கு வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் மற்றும் 49.4 சதவீத வாக்குகளைப் பெறலாம்.

2017 தேர்தலில் குஜராத்தில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2002ல் 127 இடங்களை கைப்பற்றியதே இதுவரை பாஜகவின் சிறந்த வெற்றியாக இருந்தது. கோத்ரா கலவரத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட தேர்தல்களில் நரேந்திர மோடி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். 

இதுவரை, 1985 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் 149 எண்ணிக்கையானது மாநிலத்தில் ஒரு கட்சி அதிக இடங்களை வென்றது என்ற சாதனையைப் படைத்துள்ளது. அதன்பிறகு எந்த கட்சியும் 130 இடங்களை தாண்டவில்லை.

குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 8 ஆம் தேதி ஹிமாச்சல் தேர்தலுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத், பாஜகவால் தொடர்ச்சியாக ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது, ஆனால் இந்த முறை அவர்கள் ஒரு ஆக்ரோஷமான ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் புதிய தோற்றம் கொண்ட காங்கிரஸுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.

ABP News-CVoter Exit Poll காங்கிரஸுக்கு 31-43 இடங்களை வழங்கியுள்ளது. முந்தைய சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்ற 77 இடங்களிலிருந்து கடுமையான வீழ்ச்சி என்றே கூறலாம். காங்கிரசுக்கு வெறும் 32.5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017 தேர்தலில், காங்கிரஸ் கட்சி 41.4 சதவீத வாக்குகளைப் பெற்றது.

குஜராத் தேர்தல் முடிவுகள், 2024-ல் நடைபெறவிருக்கும் தேசியத் தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரபலத்தின் முக்கிய குறிகாட்டியாக இருக்கும். அடுத்த ஆண்டு கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல்களுக்கான பாஜகவுக்கு இது ஊக்கமாக அமையும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget