Jio New Offer: ஜியோ வாடிக்கையாளருக்கு குட் நியூஸ்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்கும்"ஜியோ ஏஐ கிளவுட்" திட்டம் - முகேஷ் அம்பானி தொடங்கிவைத்தார்..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 47-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசியது...
ஜியோ பிரைன் என்று அழைக்கப்படும் முழு AI லைப்சைக்கிள் உள்ளடக்கிய டூல்ஸ் மற்றும் தளங்களின் தொகுப்பை உருவாக்கி வருகிறது என்று தெரிவித்தார். இந்நிலையில் முகேஷ் அம்பானி ஜியோ AI கிளவுட்டை அறிமுகப்படுத்தினார்.
இந்த ஆண்டு தீபாவளி முதல் ஜியோ பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பு தளத்தை கொடுப்பதாக அறிவித்தார். உலகம் முழுவதும் ஏஐ சேவைகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம் ஏஐ சேவைக்குள்ள நுழைந்துள்ளது பாராட்டத்தக்கது.
இந்த ஜியோ பிரைன் சேவை மக்கள் மத்தியிலும், நிறுவனங்கள் மத்தியிலும் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ பிரைன் திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் நிறுவனத்தின் கிரீன் எனர்ஜியில் இயங்கும் கிகாவாட் அளவிலான AI ரெடி டேட்டா சென்டரை அமைக்கப்படும் என தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள ரிலையன்ஸ்க்கு சொந்தமான இடத்தில் AI கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது இந்தியாவில் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வது மட்டும் அல்லாமல் அதன் பயன்பாட்டை மலிவு விலையில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து விரிவுபடுத்துவோம் என்று கூறினார்.
ஜியோ பிரைன் என்றால் என்ன?
ஜியோ பிரைன், ஜியோ நிறுவனத்தின் அனைத்து சேவைகளிலும் AI பயன்பாட்டை வேகமாகக் கொண்டு வர எங்களுக்கு உதவுகிறது.
இத்தகைய ஏஐ சேவைகள் மூலம் நிறுவனத்தில் டேட்டா அடிப்படையில் வேகமான முடிவுகள், துல்லியமான கணிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. மேலும், இந்த ஜியோ பிரையன் சேவயை ஜியோ நிறுவனத்தில் மட்டும் பயன்படுத்தாமல் ரிலையன்ஸின் மற்ற நிறுவனங்களிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்.
ரிலையன்ஸ் வழியாக ஜியோ பிரைனை முழு திறன் வாய்ந்த ஏஐ தளமாக மெருகேற்றிய பின்பு, நாங்கள் மற்ற நிறுவனங்களுக்கும் வழங்கக்கூடிய சக்திவாய்ந்த AI சேவை தளமாக அறிமுகம் செய்வோம் என்றார்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (JPL) இல் 67.03% பங்குகளை வைத்துள்ளது. இது ரிலையன்ஸின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சொத்துக்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.