மேலும் அறிய

பக்தர்களுக்கு குட் நியூஸ்! குருவாயூர் கோயிலில் சபரிமலை மாதிரி விர்ச்சுவல் கியூ திட்டம்!

குருவாயூர் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரும் வகையில் திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.

சபரிமலை கோயிலில் கொரோனா பரவல் சமயத்தில் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டது. அந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பிரசித்திபெற்ற​ குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட மணிநேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, சபரிமலை போன்று விர்ச்சுவல் கியூ வரிசை முறை அமல்படுத்தப்படும் என்று கேரள தேவஸ்வம்போர்டு அமைச்சர் கே.முரளீதரன் தெரிவித்துள்ளார்.​


பக்தர்களுக்கு குட் நியூஸ்! குருவாயூர் கோயிலில் சபரிமலை மாதிரி விர்ச்சுவல் கியூ திட்டம்!

இது குறித்து குருவாயூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளுடனும், அதிகாரிகளுடனும் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் கே.முரளீதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குருவாயூர் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரும் வகையில் திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். இதற்காக பிரத்யேகமான மாஸ்டர் ப்ளான் நடைமுறைப்படுத்தப்படும். கோயிலின் விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும் பணி அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும்.

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயில், சபரிமலை ஐயப்பசுவாமி கோயில் மற்றும் கொட்டியூர் மகாதேவர் கோயில் ஆகிய முக்கியத் திருக்கோயில்களை அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறந்த ஆன்மீகத் தலங்களாக மாற்ற அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தேவஸ்வம் போர்டுக்குச் சொந்தமான ஒரு சிறு துண்டு நிலம் கூட தவறான முறையில் பயன்படுத்தப்படாமல், ஆக்கிரமிக்கப்படாமல் முழுமையாகப் பாதுகாக்கப்படும். ​வேங்காடு கோசாலையில் உள்ள பசுக்களை நிபுணர்களின் மேற்பார்வையில் முறையாகப் பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். ​ புகழ்பெற்ற குருவாயூர் யானைக் கோட்டையில் உள்ள கோயிலகம் ஒரு வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்கப்படும். இங்கு சுமார் 75 யானைகள் சுதந்திரமாகவும் வசதியாகவும் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படும். ​


பக்தர்களுக்கு குட் நியூஸ்! குருவாயூர் கோயிலில் சபரிமலை மாதிரி விர்ச்சுவல் கியூ திட்டம்!

யானைகளைத் தானமாக ஏற்றுக்கொள்வது தொடர்பான சாதகமான முடிவுகள் அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்படும். குருவாயூரில் தற்போது இயங்கி வரும் மருத்துவமனை நவீன மயமாக்கப்படும்" என்றார். மேலும், குருவாயூர் கோயிலின் கிழக்கு நடையில், 1909-ம் ஆண்டு மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சேத்தூர் சங்கரன் நாயரால் காணிக்கையாக வழங்கப்பட்ட பழமையான தீபஸ்தம்பம் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தீபஸ்தம்பத்தின் திறப்பு விழாவிலும் தேவஸ்வம் போர்டு அமைச்சர் கே.முரளீதரன் கலந்துகொண்டார். சபரிமலை கோயிலில் கொரோனா பரவல் சமயத்தில் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டது. அந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் கூட்டம் கட்டுப்படுத்தப்படுவதுடன், எத்தனை பக்தர்கள் வருகிறார்கள் என்பதுபோன்ற விபரங்களும் சேகரிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. அதுபோன்று, குருவாயூர் கோயிலிலும் அமல்படுத்தப்படுவது பக்தர்களுக்குப் பெரிய அளவில் நேரத்தை மிச்சப்படுத்தும். இது நெரிசலைக் கட்டுப்படுத்தவும், தரிசன நேரத்தைத் துல்லியமாகத் திட்டமிடவும் உதவும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget