Golden Temple Lynching: பதட்டத்தில் பஞ்சாப்..! பரபரப்பில் பொற்கோவில்.. ஒருவர் அடித்துக்கொலை - நடந்தது என்ன?
2022, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் இத்தகைய சம்பவம் பொது அமைதியை மேலும் சீர்குலைக்கும் விதமாக அமைந்துவிடும் என்று அம்மாநில மக்கள் கருதுகின்றனர்.
பஞ்சாப், அமிர்தரஸ் நகரில் அமைந்துள்ள பொற்கோயில் கருவறைக்குள் நுழைந்து அவமரியாதை செய்த நபர் ஒருவர் கும்பல் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CM @CharanjitChanni strongly condemned the most unfortunate and heinous act to attempt sacrilege of Sri Guru Granth Sahib in the sanctum sanctorum of Sri Harimandir Sahib during the path of Sri Rehras Sahib.
— CMO Punjab (@CMOPb) December 18, 2021
(1/3)
*DCP Parminder Singh Bhandal (name corrected), Amritsar: Today, one 24-25-year-old man barged inside (Golden Temple) where the holy book (Guru Granth Sahib) is kept. He tried desecrating it with a sword; was taken out by Sangat people; died in the altercation. pic.twitter.com/phbsqXVp6M
— ANI (@ANI) December 18, 2021
இந்த, துயர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, " மாலை பிரார்த்தனை வேளையில், பொற்கோயில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள புனித நூலை (குரு கிரந்த் சாகிப்) அவமதிக்கும் துரதிர்ஷ்டவசமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த கொடூரச் செயலுக்குப் பின்னால் உள்ள சதிகாரர்களை விசாரிக்குமாறு மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உண்மையான காரணங்களை வெளிக்கொண்டு வர அரசின் தரப்பில் இருந்து அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழுவிடம் தெரிவிக்கப்பட்டது" என்று பதிவிட்டார்.
இதுகுறித்து அமிருதசரஸ் நகர காவல்துறை கண்காணிப்பாளர் பர்மீந்தர் சிங் ஒளலாக் கூறியதாவது: பொற்கோயிலில் புனித நூல் வைக்கப்பட்டுள்ள கருவறைக்குள் 24-25 வயது மதிப்புமிக்க நபர் அத்துமீறி நுழைந்தார். வாளைக் கொண்டு புனிதநூலை சேதப்படுத்த முயற்சிக்கும் போது, குருத்வாரா மக்கள் அவரை வெளியேற்றினர். பின்னர் நடந்த கைகலப்பு சண்டையில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவித்தார்.
2022, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் இத்தகைய சம்பவம் பொது அமைதியை மேலும் சீர்குலைக்கும் விதமாக அமைந்துவிடும் என்று அம்மாநில மக்கள் கருதுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்