Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை கிடுகிடு! ஒரே நாளில் சவரனுக்கு ₹640 உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்!
செப்டம்பர் மாதம் தொடங்கி 2 நாட்களிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது, செப்டம்பர் 1 ஆம் தேதி சவரனுக்கு 680 ரூபாயும், 2ஆம் தேதி 160 ரூபாய் உயர்ந்து சவரன் 77,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து சவரன் 78,440 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
தாறுமாறாக எகிறும் தங்க விலை:
ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலையில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது, இந்த நிலையில் கடந்த மாதம் 6 ஆம் தேதி சவரன் 75000 கடந்து, ஆகஸ்ட் 8 அன்று 75,760 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னர் விலையானது குறைந்து கொண்டே வந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கிடு கிடு உயர்வு:
ஆனால் மீண்டும் தங்கத்தின் விலையானது ராக்கெட் வேகத்தில் உயர தொடங்கியது, குறிப்பாக ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சவரன் 76000 ரூபாயை கடந்து விற்பனையானது. அதிகப்பட்சமாக சவரன் 76,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது,.
புதிய உச்சம்:
செப்டம்பர் மாதம் தொடங்கி 2 நாட்களிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது, செப்டம்பர் 1 ஆம் தேதி சவரனுக்கு 680 ரூபாயும், 2ஆம் தேதி 160 ரூபாய் உயர்ந்து சவரன் 77,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, இந்த நிலையில் சவரன் இன்று ஒரே நாளில் 640 ரூபாய் உயர்ந்து புதிய உச்சமாக சவரனுக்கு 78,440 விற்பனையாகிறது
விலையேற்றதிற்கான காரணம்?
தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் இவையே முக்கிய காரணிகளாக உள்ளன. மேலும் அமெரிக்கா, இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.





















