உலக பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 4ஆம் இடத்தை பிடித்த கௌதம் அதானி!
ஏற்கெனவே ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக விளங்கும் அதானி குழுமத் தலைவர், பில் கேட்சை பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 115.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பில் கேட்சை பின்னுக்குத் தள்ளி உலகின் 4ஆவது பணக்காரராக முன்னேறியுள்ளார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தரவுகளின் படி, அதானியின் சொத்து மதிப்பு 114 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ள நிலையில், பில் கேட்சின் சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக விளங்கும் அதானி குழுமத் தலைவர் லாரி பேஜை பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
Gautam Adani Becomes The 4th Richest Man In The World By Surpassing Bill Gates
— Invest Tales (@InvestTales) July 15, 2022
🔹GA Net Worth = $112.9B
🔹 Jeff Bezos 3rd = $136.3B
🔹 Mukesh Ambani 10th = $87.1B
🔹 Elon Musk 1st = $229.1B#gautamadani #forbes #MukeshAmbani pic.twitter.com/UiuMljc440
முன்னதாக கடந்த வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது இலாப நோக்கற்ற நிறுவனமான பில் & மெலிண்டா கேட்ஸுக்கு 20 பில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து கோடீஸ்வரர்களின் தரவரிசைப் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டது.
இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 87.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், ஃபோர்ப்ஸ் பட்டியலில் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இருப்பினும், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் அதானி குழுமம் 5ஆவது இடத்தில் உள்ளது.
ப்ளூம்பெர்க் நிகழ்நேர தரவுகளின்படி அதானியின் சொத்து மதிப்பு 110 பில்லியன் டாலர்களாக உள்ளது.
முன்னதாக 5ஜி ஸ்பெக்ட்ரெம் ஏலத்தில் நாட்டின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களான ரிலையென்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக அதானி நிறுவனமும் களமிறங்கியுள்ளது. மேலும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அதானி குழுமம் 88.1 விழுக்காடு வளர்ச்சியை எட்டி அதன் சொத்து மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்