மேலும் அறிய

பீகாரின் முதல் H3N2 பெண் நோயாளி குணமடைந்தார்: சுகாதார அதிகாரிகள் தகவல்

பீகார் மாநிலத்தின் முதல் H3N2 நோயாளி தொற்றிலிருந்து குணமடைந்தார். 30 வயதான பெண் மருத்துவ மாணவிக்கு கடந்த வாரம் H3N2 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

பீகார் மாநிலத்தின் முதல் H3N2 நோயாளி தொற்றிலிருந்து குணமடைந்தார். 30 வயதான பெண் மருத்துவ மாணவிக்கு கடந்த வாரம் H3N2 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதான் பீகார் மாநிலத்தின் முதல் H3N2 தொற்றாக பதிவானது. இந்நிலையில் அந்த மாணவி தற்போது தொற்றிலிருந்து பூரண குணமடைந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஐசிஎம்ஆரின் ராஜேந்திர மெமோரியல் ரிசேர்ச் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸின் இயக்குநர் மருத்துவர் கிருஷ்ண பாண்டே கூறுகையில், "10 நாட்களுக்கு முன்னர் என்னிடம் ஒரு மருத்துவ மாணவி சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு காய்ச்சலும் வறட்டு இருமலும் இருந்தது. அவருக்கு ஆஸெல்டமிவிர் ஆண்ட்டி வைரல் ட்ரக் கொடுத்தோம். இப்போது அவர் குணமாகிவிட்டார்" என்றார்.

அச்சுறுத்தும்  H3N2 அறிவுறுத்தும் அரசு:

காய்ச்சல் போன்ற நோய் அல்லது கடுமையான சுவாச நோய்த்தொற்று போன்றவற்றால் வெளிப்படும் சுவாச நோய்க்கிருமிகளின் ஒருங்கிணைந்த கண்காணிப்புக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்:

பருவகால இன்ஃப்ளூயன்ஸா வைரஸான H3N2 வகை வைரஸ் அதிகம் பரவி வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தொற்று மற்றும் h3n2 வைரஸ் பாதிப்புகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா மற்றும் h3n2 வைரஸ் சிகிச்சைக்காக மருந்துகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் இருப்பு, மருத்துவமனையில் படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றை உறுதி செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. "கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இது மிகவும் கவலைக்குறிய விஷயமாக உள்ளது என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கொரோனா தடுப்பூசியால் நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவே உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

கண்காணிக்கும் அரசு:

இந்த காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் ”பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பருவகால வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஹெச்3என்2 வகை காய்ச்சல் தொடர்பாகவும், இணை நோய்கள், உயிரிழப்புகள் குறித்தும் சுகாதார அமைச்சகம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. ஹெச்3என்2 காய்ச்சலால் இதுவரை கர்நாடகா மற்றும் ஹரியானாவில் தலா ஒருவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தடுப்பு நடவடிக்கைகள்:

நோயாளிகளை வகைப்படுத்துதல், சிகிச்சை முறைகள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளமான www.mohfw.nic.in மற்றும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இணையதளமான www.ncdc.gov.in ஆகியவற்றிலும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒசெல்டாமிவிர் என்ற மருந்து இந்தக் காய்ச்சலுக்கு உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பொது சுகாதார மையங்களில் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget