மேலும் அறிய

ஒவ்வொரு 6 நிமிடத்திற்கும் ஒருவர் பலி! 2 நிமிடங்களுக்கு இருவர் காயம் - இந்தியாவின் புள்ளி விவரம்!

ஒவ்வொரு 6 நிமிடத்திற்கும் ஒருவர் பலி; இரண்டு நிமிடங்களுக்கு இருவர் காயம் அடைகின்றனர் என்ற புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு 6 நிமிடத்திற்கும் ஒருவர் பலி; இரண்டு நிமிடங்களுக்கு இருவர் காயம் அடைகின்றனர் என்ற புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துகள் பற்றிய புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. 2021ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க பதிவு செய்யப்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் மற்றும் சாலை விபத்துகள், ரயில் விபத்துகள் உள்ளிட்ட தகவல்கள் குறித்த மொத்த ஆவணத்தொகுப்பான தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கை அண்மையில் வெளியானது.

சைரஸ் மிஸ்ட்ரி கார் விபத்து:

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் சேர்மன் சைரஸ் மிஸ்ட்ரி சென்ற கார் நேற்று விபத்துக்குள்ளானது. அவர் சென்ற கார் 9 நிமிடங்களில் 20 கிலோமீட்டரைக் கடந்தது என்றும் முன்னாள் சென்ற காரை இடதுபுறத்தில் இருந்து ஓவர் டேக் செய்ய முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து நடந்த போது காரின் பின்னால் இருந்த சைரஸ் மிஸ்ட்ரி மற்றும் ஜஹாங்கிர் சீட் பெல்ட் அணியவில்லை என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனந்த் மஹிந்திரா ட்வீட்:

சிரஸ் மிஸ்ட்ரி அகால மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா, இனி நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்து சென்றாலும் சீட் பெல்ட் அணிவேன். நீங்களும் அதைப் பின்பற்றுங்கள். நம் குடும்பத்தினருக்காக இதைச் செய்வோம் என்று கூறியுள்ளார்.

விபத்து புள்ளிவிவரம்:

இந்நிலையில் தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கையை ஆராய்ந்து பார்த்தால், அதில் இந்தியாவில் ஒவ்வொரு 6 நிமிடமும் ஒரு இந்தியர் சாலை விபத்தில் அதுவும் அதிவேகமாக வாகனத்தை இயக்கி நடக்கும் விபத்தில் உயிரிழக்கிறார். அதேபோல் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு இருவர் அதிவேகமாக வாகனத்தை இயக்குவதால் காயமடைகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புள்ளிவிவரத்தின் படி கடந்த ஆண்டு (2021) வேகமாக வாகனம் ஓட்டி நடந்த விபத்துகளில் 87,050 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்கள் 11,190 பேர் உயிரிழந்தனர். 2,28.274 பேர் காயமடைந்தனர். நாட்டில் 60 சதவீதம் சாலை விபத்துகளுக்கு அதி வேகத்தில் வாகனத்தை இயக்குவதே காரணமாக உள்ளது. இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 4,03,116 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதுவே 2020 ஆம் ஆண்டில் 3,54,796 ஆக இருந்தது. அதேபோல் 2021ல் சாலை விபத்தில் உயிரிழப்புகள் 1,55,622 ஆக அதிகரித்துள்ளது. 2020ல் சாலை விபத்தில் உயிரிழப்புகள் 1,33,201 ஆக இருந்தது.

2020-ஐ விட 2021-ல் மிக அதிகமாக சாலை விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் 57,090 சாலை விபத்துகளும், மத்தியப் பிரதேசத்தில் 49,493 விபத்துகளும், உத்தரப் பிரதேசத்தில் 36,509 விபத்துகளும், மகாராஷ்டிராவில் 30,086 விபத்துகளும், கேரளாவில் 33,501 விபத்துகளும் நடந்துள்ளன. இறப்பு விகிதத்தைப் பொருத்தவரை மொத்த விபத்துகளில் 3,73,884 பேர் காயமடைந்தனர், 1,73,860 பேர் உயிரிழந்தனர். இவர்களில் உத்தரப்பிரதேசத்தில் 24,711 பேர் இறந்தனர். தமிழகத்தில் 16,685 பேர் இறந்தனர். மகாராஷ்டிராவில் 16,446 பேர் இறந்தனர். இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமே முறையே 14.2%, 9.6% மற்றும் 9.5% சாலை விபத்து உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன. மொத்தமாக இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் 33.3 சதவீத இறப்பு பதிவாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar  : ”சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க?”கொதித்தெழுந்த ஜெகதீப் தன்கர் நடந்தது என்ன?Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Embed widget