Chinar Corps | இந்திய ராணுவத்தின் 15 சினார் கார்ப்ஸ் பக்கத்தை மீண்டும் ஆக்டிவேட் செய்தது இன்ஸ்டாகிராம்.. ஃபேஸ்புக் அக்கவுண்ட்டின் நிலை?
ஜம்மூ காஷ்மீரின் ஸ்ரீநகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் சினார் கார்ப்ஸின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஜனவரி 28-ம் தேதி காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் ப்ளாக் செய்யப்பட்டது.
இந்திய ஆர்மியின் தனிப்பட்ட சமூக வலைத்தளப் பக்கமான 15 கார்ப்ஸ் எனப்படும் சினர் கார்ப்ஸ் பக்கத்தை மீண்டும் ஆக்டிவேட் செய்தது இன்ஸ்டாகிராம் நிறுவனம். ஏற்கனவே அது முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. ஜம்மூ காஷ்மீரின் ஸ்ரீநகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் சினார் கார்ப்ஸின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஜ்னவரி 28ம் தேதி காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் ப்ளாக் செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களாக இந்தப் பக்கங்கள் செயலற்று இருந்த நிலையில் தற்போது மீண்டும் அவை செயல்படுத்தப்பட்டுள்ளன. குடியரசு தினம் முடிந்ததும் உடனடியாக இந்த ஹாண்டில்கள் ப்ளாக் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Instagram has restored the handle of Indian Army's Chinar Corps, while Facebook has assured a timely solution, say officials
— Press Trust of India (@PTI_News) February 9, 2022
சினார் கார்ப்ஸின் பேஸ்புக் ஹாண்டில் @ChinarCorpsIA என்ற பெயரிலும் இன்ஸ்டாகிராம் பக்கம் ChinarCorpsIA என்கிற பெயரிலும் இயங்கிவந்தன. பேஸ்புக்கில் 24,000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களையும், 23,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் இது கொண்டுள்ளது. மேலும் இது ஒரு "அரசு அமைப்பு" என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம் இன்ஸ்டாகிராம் கணக்கில் சுமார் 43,300 ஃபாலோயர்களையும் இது கொண்டுள்ளது. "இந்திய இராணுவத்தின் சீனார் கார்ப்ஸின் அதிகாரப்பூர்வ கணக்கிற்கு வரவேற்கிறோம்" என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இவை இரண்டும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவுக்குச் சொந்தமானது. ஹாண்டில்கள் ஃப்ளாக் செய்யப்பட்ட நிலையில் அதிகாரிகள் அந்த நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதினார்கள் அதையடுத்து தற்போது அந்த ஹாண்டில்கள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
View this post on Instagram