மேலும் அறிய

Exclusive: தயாராகும் மோடி 3.0  அமைச்சரவை: ‘கிங்மேக்கர்கள்’ வைக்கும் கோரிக்கையால் சலசலப்பு

தற்போதைய நிலையில், தெலுங்கு தேசம் கட்சியை விட்டால், வேறு வழியில்லை என்ற நிலையில், அதற்குச் செவிசாய்க்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

18-வது மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கிடைத்துள்ளதால், மோடி 3.0 அமைச்சரவை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. அதற்கான வழிகாட்டல்களை இறுதி செய்யும் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.

மோடி 3.0 அரசு அமைவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கப்போவது கிங் மேக்கர்களான தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ்குமாரும்தான். ஏனெனில், எதிர்பார்த்த அளவுக்கு பாஜக-வால் தனித்து இடங்களைப் பெற முடியவில்லை. தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணியில் உள்ள சந்திரபாபுவும் நிதீஷும் ஒத்துழைத்தால்தான், ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

சந்திரபாபு வைக்கப்போகும் கோரிக்கை:

இந்தச் சூழலில்தான், தெலுங்கு தேச கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் ஏபிபி நாடு பேசிய போது, பல தகவல்கள் கிடைத்தன. மோடி அமைச்சரவையில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள சந்திரபாபு நாயுடு, தமது கட்சிக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதுவும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், விவசாயத்துறை அமைச்சகம், ஜல் சக்தி எனும் தண்ணீர் துறை அமைச்சகம் ஆகியவை தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் 3 கேபினட் அமைச்சர்கள் உட்பட 6 அமைச்சர்கள் பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தெலுங்கு தேசம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். 

Exclusive: தயாராகும் மோடி 3.0  அமைச்சரவை:  ‘கிங்மேக்கர்கள்’ வைக்கும் கோரிக்கையால் சலசலப்பு

தற்போதைய நிலையில், தெலுங்கு தேசம் கட்சியை விட்டால், வேறு வழியில்லை என்ற நிலையில், அதற்குச் செவிசாய்க்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தெந்த துறைகள் வழங்கப்படும் என்பது குறித்து பேச்சு நடத்தி முடிவெடுப்போம் என்றும் அதேபோல், அமைச்சர்கள் எண்ணிக்கை குறித்தும் சமரசமாகப் பேசி முடிவெடுப்போம் எனவும் பாஜக தலையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஆந்திரா அரசிற்கும் அதிக நிதி தேவைப்படுவதால், சந்திரபாபு நாயுடுவும், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து, தமக்குத் தேவையான அமைச்சர் பதவிகளையும், சமரசம் செய்துப் பெறுவார் என தெலுங்குதேச கட்சியினரும் உறுதியாகத் தெரிவிக்கின்றனர். 

துணை பிரதமர் பதவிக்கு கோரிக்கையா?

இதற்கிடையே, ஐக்கிய ஜனதாதளத் தலைவர் நிதீஷ்குமாரும் தங்களது கட்சிக்கு முக்கிய அமைச்சரவை இலாகாக்கள் வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளாராம். உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள், துணை பிரதமர் பதவிக்கும் அவர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன. ஆனால், துணை பிரதமர் இல்லாவிட்டால், குறைந்தபட்சமாக 4 கேபினட் அமைச்சர்களாவது தங்களுக்கு வேண்டும் என ஐக்கிய ஜனதாதளம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.

சிறுகுறு கட்சிகளுக்கும் வாய்ப்பு:

இதுமட்டுமன்றி, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட சில பல, சிறுகுறு கட்சிகளுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக தலைமை தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதெல்லாம் குறித்து பேசி, பல முக்கிய முடிவுகள் இன்றைய தேசிய ஜனநாயக் கூட்டணியின் கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன.

எப்போது அமைச்சரவை பதவியேற்பு?

குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த கசிந்த தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை மாலை, மோடி 3.0 அமைச்சரவை பதவியேற்கும் என்றும் 3-வது முறையாக பிரதமர் பதவியை மோடி ஏற்பார் என்றும் தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் மறைமுகமாக செய்வதற்கான பணிகள், அமித் ஷா உத்தரவின் அடிப்படையில் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சராகும் சுரேஷ் கோபி, தமிழகத்திற்கு உண்டா?

தென்னிந்தியாவைப் பொறுத்தமட்டில், கேரளத்தில்  திருச்சூர் தொகுதியில் இருந்து முதன்முறையாக பாஜக எம்.பி-யாக தேர்வாகியுள்ள  சுரேஷ்கோபி, நிச்சயம் அமைச்சராகிறார் என பாஜக வட்டாரங்கள் உறுதிப் படுத்தியுள்ளன. ஆனால், தமிழகத்தில் பாஜக  தோல்வி அடைந்ததால், அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், குறைந்தபட்சம் ஒரு இணை அமைச்சர் பதவி, தமிழகத்திற்கு ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. அது அண்ணாமலைக்கா, முருகனுக்கா அல்லது கூட்டணி கட்சியினருக்கா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏனெனில், தமிழகத்திற்கு அமைச்சர் பதவி கொடுத்தால்தான், இங்கு கட்சியை வலுப்படுத்த முடியும் என்பது பாஜக -வின் நலம் விரும்பிகள் வாதமாக இருக்கிறது. 

Exclusive: தயாராகும் மோடி 3.0  அமைச்சரவை:  ‘கிங்மேக்கர்கள்’ வைக்கும் கோரிக்கையால் சலசலப்பு

சமரசத்திற்கு தயாராகிவிட்ட  பாஜக:

மோடி 1.0, மோடி 2.0 போன்று இல்லாமல் மோடி 3.0 அமைச்சரவை அமைப்பதில் பாஜக-விற்கு ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. ஏனெனில், சந்திரபாபு  நாயுடு மற்றும் நிதீஷ்குமார் என இரு பெரும் மூத்த தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் வகையில், அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டிய நிலைக்கு மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தேர்தல் முடிவுகளுககுப் பிந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் கூட்டத்தில், இந்தச்சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படுமா, கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படுமா போன்ற பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், டெல்லியில் இருந்து வரும் தகவல்கள், கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வதில் பாஜக தலைமை உறுதியாக இருப்பதாகவும், மோடி தலைமையில் ஆட்சி அமைத்தே ஆக வேண்டும் என்பதால்,  கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும் என்றே தெரிகிறது.

முதல் இரண்டு காலக் கட்டங்களைப் போல், மோடி 3.0,  ஆட்சியில், பிரதமர் மோடியால் முழு வேகத்துடன், அவர் பாணியில் நினைத்ததை நிறைவேற்றும் வகையில் செயல்பட முடியுமா அல்லது கூட்டணி கட்சிகள் செக் வைத்து, சிக்கல்களைத் தருவார்களா என்பதற்கு காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும். அதேபோல், சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ்குமாரும் தொடர்ந்து ஆதரவு தருவார்களா என்பதும் பல மில்லியன் டாலர் கேள்வி என்றால் மிகையில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget