பாஜக, ஆர்.எஸ்.எஸ் பற்றவைப்பது வெறுப்புத்தீ.. ஒவ்வொரு இந்தியனும் விலை கொடுக்க வேண்டியுள்ளது - ராகுல் காந்தி
பாஜக, ஆர்எஸ்எஸ் பற்றவைக்கும் வெறுப்புக்கு ஒவ்வொரு இந்தியனும் விலை கொடுக்க வேண்டியுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
பாஜக, ஆர்எஸ்எஸ் பற்றவைக்கும் வெறுப்புக்கு ஒவ்வொரு இந்தியனும் விலை கொடுக்க வேண்டியுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் வயநாடு எம்.பியும் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தனது ட்விட்டரில் கருத்து பகிர்ந்துள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர், பாஜக, ஆர்எஸ்எஸ் பற்றவைக்கும் வெறுப்புக்கு ஒவ்வொரு இந்தியனும் விலை கொடுக்க வேண்டியுள்ளது. இந்தியாவின் உண்மையான கலாச்சாரம் என்பது கொண்டாட்டங்களில் சேர்ந்து மகிழ்வது. சமூகத்தில் சேர்ந்து வாழ்வது. அந்த கலாச்சாரத்தை பாதுகாக்க நாம் முயல்வோம் என்று பதிவிட்டுள்ளார்.
Every Indian is paying the price for the hate fueled by BJP-RSS.
— Rahul Gandhi (@RahulGandhi) April 16, 2022
India's true culture is that of shared celebrations, community, and cohesive living.
Let’s pledge to preserve this. 🇮🇳 pic.twitter.com/Gph8k0TwOb
மேலும் அதில் தனது தாயாரும், காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவருமான சோனியா காந்தி எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். அந்த கட்டுரைக்கு பெருகிவரும் மத மோதல்களைக் கருவாகக் கொடுத்துள்ளார் சோனியா காந்தி. கட்டுரைக்கு ஏ வைரஸ் ரேஜஸ் அதாவது சீறும் வைரஸ் என்று அவர் தலைப்பிட்டுள்ளார்.
அண்மையில், அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அந்நாட்டு வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் இந்தியாவில் மனித உரிமைகள் மீறல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் தான் ராகுல் காந்தி, பாஜக, ஆர்எஸ்எஸ் பற்றவைக்கும் வெறுப்புக்கு ஒவ்வொரு இந்தியனும் விலை கொடுக்க வேண்டியுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி தனது கட்டுரையில், "இந்தியாவில் ஒரு வைரஸ் சீறிக் கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் வெறுப்பால், பிரித்தாளும் கொள்கையால் உருவானது. அது நம்பிக்கையின்மையை ஆழப்படுத்துகிறது. தேசத்தையும், தேச மக்களையும் சிதைத்துக் கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
கொளுந்துவிட்டு எரியும் இந்தத் தீயை நாம் அணைப்போம்.. வெறுப்பு சுனாமியையும் தடுத்து நிறுத்தம் வேண்டும் என்று அக்கட்டுரையில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக, வெறுப்புகளை ஓங்கி ஒலிக்கிறது. இங்கே சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்றும் சோனியா காந்தி அந்தக் கட்டுரையில் கூறியுள்ளார்.