மேலும் அறிய
Advertisement
News Wrap : டெல்லி கொண்டுசெல்லப்பட்ட வீரர்களின் உடல்கள்! பி.சி.சி.ஐ.க்கு குவியும் கண்டனம்.! இன்றைய முக்கியச் செய்திகள்..
காலை முதல் மாலை வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டது
- ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சக ராணுவ வீரர்களின் உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டது
- ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கும் வெலிங்டனில் ராணுவ மரியாதை
- குன்னூரில் இருந்து கோவை சூலூர் விமான நிலையம் கொண்டு வரும் பாதை முழுவதும் மக்கள் மலர்தூவி அஞ்சலி
- முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் அஞ்சலி
- ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் ஏர்மார்ஷல் மன்வேந்திரா சிங் தலைமையில் ராணுவ விசாரணை தொடங்கியது
இந்தியா :
- ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கும் பிரதமர் மோடி இரவு நேரில் அஞ்சலி என தகவல்
- முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின்ராவத் உள்பட 13 பேரின் மறைவிற்கு நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி
- டெல்லி கொண்டு செல்லப்பட்ட பிபின்ராவத் உள்பட 13 பேரின் உடல்களை பெற ராணுவ வாகனங்கள் தயார் நிலையில் ஆயத்தம்
- ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை அடையாளம் காண குடும்பத்தார் டெல்லி வருகை
- மரபணு பரிசோதனை உள்பட அறிவியல் பரிசோதனை மூலமாக உடல்கள் அடையாளம் காண நடவடிக்கை
- முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்த டெல்லியில் மக்கள் குவிந்தனர்
உலகம் :
- ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உள்பட 13 பேர் மறைவிற்கு அமெரிக்க இரங்கல்
- முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உள்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு உலக நாடுகள் இரங்கல்
- குழந்தைகளின் முன்னேற்றத்தில் கொரோனா 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது – யுனிசெப்
- ஆயுத விற்பனை பட்டியலில் உலகின் டாப் 100 இடங்களில் இந்தியாவின் மூன்று நிறுவனங்கள்
- ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் தீவிரத்தால் உயிரிழப்பு அதிகரிக்கும் – ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை
விளையாட்டு :
- ஒருநாள் போட்டி கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கியதற்கு சமூக வலைதளங்களில் பி.சி.சி.ஐ.க்கு கடும் கண்டனம்
- பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
- ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் அபார சதம்
- ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் 14 நோ பால்களை வீசிய பென் ஸ்டோக்ஸ்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion