மேலும் அறிய

EV-Yatra Portal : மின்சாரம் வாகனம் பயன்படுத்துபவரா? அதென்ன இ.வி.யாத்ரா செயலி? முழு விவரம்!

EV-Yatra Portal : ’EV-Yatra’ ம் மொபைல் செயலியை அறிமுகம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு (Droupadi Murmu)  ’EV-Yatra’ போர்டல் மற்றும் மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய எரிசக்தி பாதுக்காப்பு தின (National Energy Conservation Day) கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசுத் தலைவர் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய உதவும் வகையிலான போர்டர்கள் மற்றும் அதற்கு உதவும் மொபைல் செயலியின் பயன்பாட்டையும் அறிமுகம் செய்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய முர்மு. “ எதிர்கால தலைமுறை இளைஞர்களுக்கு மாசற்ற சூழலை வழங்க வேண்டிய கடமை நம் தலையாய கடமையாகும். மாசற்ற காற்றை சுவாசிப்பது மனிதனின் அடிப்படை உரிமை. சூற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுப்பதன் மூலம் இப்பூமியில் பல உயிர்களைக் காப்பற்ற முடியும்.” என்று கூறினார். 

எரிசக்தி பாதுகாப்பு என்பது உலகளவில் மட்டும் அல்ல, நமது கடமையும் கூட. காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், கார்பன் எமிசன், கிரீன்ஹவுஸ் வெளியேற்றம் ஆகியவற்றின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருவதாக முர்மு கூறினார். 

 EV யாத்ரா செயலி:

'EV Yathra' என்ற மொபைல் ஆப் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் நாட்டில் உள்ள எலக்ட்ரானிக் வாகனங்களின் சார்ஜிங் பாயிண்ட்களின் விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். எந்தெந்த பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட்கள் உள்ளன, சார்ஜிங் ஸ்டேசன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள சார்ஜர்களின் வகைகள், சார்ஜ் செய்வதற்கான கட்டண விவரம், சார்ஜிங் ஸ்லாட்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் விவரங்கள் அனைத்தும் இந்தச் செயலில் குறிப்பிடப்பட்டிருக்கும். 

பயனாளர்கள் சார்ஜ் செய்வதற்கு முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இ.வி.யாத்ரா செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மின்சார வாகன பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதற்காக பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு சார்பில் பொது எலக்ட்ரானிக் சார்ஜிங் பாயிண்ட்களை அமைத்து வருகிறது. தற்போதுவரை நாட்டில் 5 ஆயிரத்து 151 சார்ஜிங் பாயிண்ட்கள் செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். நாட்டில் 18 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 

கர்நாடகாவில் 698, மகாராஷ்டிராவில் 660, புதுடெல்லியில் 539 மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் செயல்பட்டு வருகிறது. Bureau of Energy Efficiency (BEE)- உருவாக்கியிருக்கும் EV Yatra செயலியில் மின்சார வாகனங்களுக்கு (charge point operators (CPOs)) சார்ஜிங் பாயிண்ட்கள் வழங்கும் நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய இந்த செயலி மூலம் அருகில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களை எளிதில் அடையாளம் காண முடியும். 

https://play.google.com/store/apps/details?id=com.ev.yatra - என்ற லிங்க் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ’EV Yatra’ செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget