மேலும் அறிய

திருநர்களுக்கான உதவியில் முன்னுதாரணமாக நிற்கும் எர்ணாகுளம்: மற்ற மாநிலங்கள் கவனிக்குமா?

மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது, ​​எர்ணாகுளத்தில் திருநங்கைகளின் எண்ணிக்கை அதிகம். நமது மாவட்டத்தில் அரசு நிறுவனங்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையேயான தொடர்பும் சிறப்பாக உள்ளது.

மத்திய சமூக நீதித்துறையின் எர்ணாகுளம் அலுவலகம் நகரை திருநர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றும் வகையில் தயாராகி வருகிறது. மாநிலத்தில் ஆங்காங்கே தென்படும் சமூகமாக இருந்தாலும், எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருநர்கள் வசித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் திருநர்களுக்கு அங்கே வசிக்க வீடுகள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ”திருநர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் எர்ணாகுளம் முன்னிலை பெற்றால், மற்ற மாவட்டங்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும்" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

“மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது, ​​எர்ணாகுளத்தில் திருநங்கைகளின் எண்ணிக்கை அதிகம். நமது மாவட்டத்தில் அரசு நிறுவனங்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையேயான தொடர்பும் சிறப்பாக உள்ளது. சமூகத்திற்கு உதவும் வகையில் தேசிய சுகாதார இயக்கத்துடன் ஒருங்கிணைந்து ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்று மாவட்டத்தில் திட்டமேம்பாட்டின் ஒரு பகுதியாகச் செயல்படும் ஸ்ரீஜா என்கிற அலுவலர் கூறினார்.

பாலின மாற்றத்தை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, விடுதிக் கட்டணம், பெருந்தொற்று நோய் காலக்கட்டத்தில் ஹார்மோன் சிகிச்சைக்கான நிதியுதவி, உணவுப் பெட்டிகள் வழங்குதல் மற்றும் திருமண நிதியுதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் மாவட்டத்தில் இருந்து 219 திருநங்கைகள் பயனடைந்துள்ளனர். இருப்பினும், பல்வேறு திட்டங்களைப் பற்றி பலர் அறியாமல் இருப்பதாகவும், ஒரு சிலர் மட்டுமே திருமணத்திற்கு உதவிபெற முன்வந்துள்ளதாகவும் அதிகாரி கூறினார்.

“ஒவ்வொரு மாணவரும் ஏழாம் வகுப்பிலிருந்து மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகையாகப் பெறுவார்கள். கடந்த ஆண்டு, ஐந்து திருநங்கை மாணவர்கள் உதவித்தொகை பெற்றனர். பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் அதன் பிந்தைய பராமரிப்புக்காக, 18 பேர் சில கட்டங்களாக உதவி பெற்றனர். திறன் மேம்பாடு (சாகல்யம்) மற்றும் அவசர நிதி உதவி (கருத்தல்) ஆகிய திட்டங்களையும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம். தொலைதூரக் கல்வி மாணவர்கள் கடந்த ஆண்டு உதவித்தொகை பெறத் தொடங்கினர், ”என்றும் அதிகாரி கூறினார்.

முன்னதாக,

கேரள மாநிலத்தில் வரும் மே மாதம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில ரேஷன் கடைகளில் மக்கள் பயன்பெறும் வகையில் வங்கிச் சேவையை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் மொத்தம் 14,000 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 800 கடைகளில் போதிய இட வசதி உள்ளது. அப்படிப்பட்ட கடைகளின் ஊழியர்கள் கடையில் வங்கிச் சேவை வழங்கும் விரிவாக்கப் பணியை செய்ய இசைவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்த வாரம் கேரள உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் முக்கிய கூட்டத்தைக் கூட்டவுள்ளார். அந்தக் கூட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.
இந்தத் திட்டத்தின் நோக்கம், இபிஓ சேல் பாயின்ட் EPoS (Electronic Point of Sale) இயந்திரம் மூலம் வங்கி சேவைகளை வழங்குவதே. இந்த சேவையை வழங்குவதற்காக 4 வங்கிகள் முன்வந்துள்ளன. இதனைப் பயன்படுத்திக் கொள்ள ரேஷன் அட்டைதாரர்களின் ரேஷன் அட்டையானது சிப் அடிப்படையிலான ஸ்மார்ட் கார்டாக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ரேஷன் கடைகளில் உள்ள வங்கிச் சேவை மையம் மூலமாகவே மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்தலாம். 


இது தொடர்பாக அமைச்சர் அனில் கூறும்போது, இந்தத் திட்டம் முதற்கட்டமாக 1000 ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்படும். அதுவும் ஓராண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் ஏற்கெனவே உள்ள மொபைல் ரேஷன் கடை திட்டமானது மேலும் 36 பழங்குடியின கிராமங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மொபைல் ரேஷன் கடை நீட்டிப்பு விழா கடந்த வியாழக்கிழமை பாரசாலா சட்டப்பேரவை தொகுதியில் நடந்தது. அம்பூரி பகுதியில் உள்ள கிராம மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக மொபைல் ரேஷன் திட்டமானது ஆராலம், கண்ணூர் ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கும் ஏப்ரல் 28ல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ரேஷன் திட்டத்திற்கான வாகன உதவியை அந்தந்தப் பகுதி எம்.எல்.ஏக்கள் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்த அரசு மொபைல் ரேஷன் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்ததற்கு காரணமே பல்வேறு கிராமங்களிலும் மஞ்சள் குடும்ப அட்டை வைத்துள்ளோர் தங்களுக்கான ரேஷனைப் பெறுவதில் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள் என்பதே என்று அமைச்சர் விளக்கினார்.

ரேஷன் அட்டைகளுக்கு வீடு தேடி சென்று பொருட்களை வழங்கும் திட்டத்தை டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சிறப்பாக நிறைவேற்றியது. தற்போது பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்த பின்னர் அங்கும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் சேர்க்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ரேஷன் கடை வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை ஒருங்கிணைப்பது மிகச்சரியான சிறப்பான சமூக சேவை என சமூக ஆர்வர்லர்கள் பலரும் வரவேற்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget