Election Laws Amendment Bill: புதுப்புது மாற்றங்கள்..! தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.!
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதால் 18 வயதானவர்கள் விரைவாக வாக்கு உரிமையை பயன்படுத்த முடியும் என்று அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, கடும் அமளிக்கு இடையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், திரிணாமுல், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்கும் தேர்தல் சீர்த்திருத்த மசோதா நிறைவேறியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதால் 18 வயதானவர்கள் விரைவாக வாக்கு உரிமையை பயன்படுத்த முடியும் என்று அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
'The Election Laws (Amendment) Bill, 2021' passed in Lok Sabha.
— ANI (@ANI) December 20, 2021
The Bill seeks to allow electoral registration officers to seek the Aadhaar number of people who want to register as voters "for the purpose of establishing the identity".
House adjourned till tomorrow, 21st Dec. pic.twitter.com/QjGDjGhl4j
முன்னதாக, தேர்தல் சீர்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தாக்கல் செய்தார்.இதையடுத்து எதிர்க்கட்சியிகளின் அமளியால் மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது வருகிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.
அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த சட்ட திருத்த மசோதா வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணோடு இணைப்பதற்கு வழிவகை செய்கிறது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்