Color Photo in EVM: அட இது நல்லா இருக்கே.! வாக்கு எந்திரத்தில் வேட்பாளரின் கலர் போட்டோ; பீகார் தேர்தலில் அறிமுகம்-EC
பீகார் தேர்தலில் இருந்து, வாக்கு எந்திரத்தில் வேட்பாளரின் கலர் போட்டோ இடம்பெறும் வகையில் புதிய முறையை கொண்டு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது உள்ள முறைப்படி, வாக்கு எந்திரத்தில் கட்சிகளின் சின்னமும், வேட்பாளரின் பெயரும் இடம்பெற்றிருக்கும். ஆனால், பீகார் தேர்தலில் தொடங்கி, புதிய முறையை அறிமுகப்படுத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேட்பாளரின் கலர் போட்டோ அதில் இம்பெற்றிருக்கும்.
வாக்கு எந்திரத்தில் வேட்பாளர் கலர் போட்டோ, சீரியல் நம்பர்
இந்தியாவில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களில், வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக, வாக்கு எந்திரங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்தி வருகிறது.
அந்த வாக்கு எந்திரத்தில், வேட்பாளரின் படம், கட்சியின் சின்னம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். அவற்றை பார்த்து வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள். தற்போது உள்ள எந்திரங்களில், வேட்பாளரின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மற்றும் சின்னங்கள் போன்றவை தெளிவாக தெரியும் வகையில் இருக்காது.
இதனால், வேட்பாளர்களுக்கு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம், வாக்கு எந்திரத்தில் வேட்பாளரின் பெயர், கட்சியின் சின்னம் உள்ளிட்டவை தெளிவாக தெரியும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதன்படி, வாக்கு எந்திரத்தில், வேட்பாளர்களின் புகைப்படங்கள் கலர் போட்டோவாக அச்சிடப்பட்டு ஒட்டப்படுட்ம என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேட்பாளரின் சீரியல் நம்பர் தெளிவாக தெரியும்படி அச்சிடப்படும் எனவும், வேட்பாளர்களின் பெயரும் பெரிய அளவிலான எழுத்தாக அச்சிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதனால், வாக்காளர்கள், தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் புகைப்படத்தை தெளிவாக பார்த்து, சீரியல் நம்பர் மற்றும் புகைப்படத்தை ஒப்பிட்டு, எந்த குழப்பமும் இல்லாமல் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர் புகைப்படத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், நான்கில் மூன்று பங்கு இடத்தில், வேட்பாளரின் கலர் படம் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையை, வரும் பீகார் சட்டமன்ற தேர்தலில் இருந்து அமல்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்க தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.





















