ED Raid: கடந்த 5 ஆண்டுகளில் அமலாக்கத்துறையால் கைதான அரசியல்வாதிகள் யார் யார்? விபரங்கள் இதோ..!
ED Raid: கடந்த ஐந்து ஆண்டுகளில் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அமலாக்கத்துறையால் ரெய்டு,சம்மன் மற்றும் கைது என அரசியல் களத்தில் மிகவும் பரபரப்பான நிகழ்வுகள் குறித்து இங்கு காணலாம்.
சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான அனில் பரப்
பணமோசடி வழக்கு தொடர்பாக சிவசேனாவின் மகாராஷ்டிர அமைச்சர் அனில் பராப்பின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மற்றும் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட மகா விகாஸ் அகாடி அதாவது கூட்டணி - 2020 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர சட்டப் பேரவை தேர்தலில் பாஜகவை தோற்கடித்தது.
அமலாக்கத்துறை கைது என்பது "அரசியல் பழிவாங்கலுக்கு" ஒரு வழி என்றும், இது பாஜகவை எதிர்த்துப் போராடும் சிவசேனாவின் உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்றும் அக்கட்சி அப்போது கூறியது.
காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக்
மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமலாக்கத்துறை கைது செய்தது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று ED, மகாராஷ்டிரா மாநில சிறுபான்மையினர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் நவாப் மாலிக்கை பணமோசடி வழக்கில் கைது செய்தது.
"மாலிக் கைது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று காங்கிரஸ் கட்சி கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதாவது"இது மாநில கேபினட் அமைச்சர் எந்தவொரு குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்படவில்லை”, மாறாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மாநிலத்தில் "அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றன" என்று அவரது தைரியமான அறிக்கைகளின் காரணமாக என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தை மாலிக் தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கினார், மேலும் குறிப்பாக, ஏஜென்சியின் அதிகாரிகளில் ஒருவரான சமீர் வான்கடே, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை குறிவைத்ததாக குற்றம் சாட்டினார்.
கடந்த 20201ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், மாலிக்கும் அவரது குடும்பத்தினரும் சமூக விரோதிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார்.
அனில் தேஷ்முக், மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர்
2021ஆம் ஆண்டு நவம்பரில், மகாராஷ்டிர காங்கிரஸ் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மாநில காவல்துறை அமைப்பில் மிரட்டி பணம் பறித்தது தொடர்புடைய பணமோசடி வழக்கில் 12 மணிநேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், தேஷ்முக் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி கே.யு.சண்டிவால் கமிஷன், "க்ளீன் சிட்” என அறிக்கை அளித்தது, அதாவது குற்றமற்றவர் எனக் கூறியது.
தேஷ்முக் பிஎம்எல்ஏவின் கீழ் கைது செய்யப்பட்டு 14 மாதங்களுக்குப் பின்னர் அவர் கடந்த மே 21ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் நடந்த நிலக்கரி ஊழல் தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கு சம்மன் அனுப்பியதாகக் கூறப்படும் பணமோசடி முறைகேடு தொடர்பான விசாரணையை கொல்கத்தா சென்று விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மே 12 அன்று ED-யிடம் தெரிவித்தது.
முன்னதாக, பணமோசடி விசாரணையில் தங்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி எம்பி அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
34 வயதான அபிஷேஎக் பானர்ஜி, டயமண்ட் ஹார்பர் சட்டசபை மக்களவையை எம்.பி., மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் ஆவார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார்
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மீது பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு மே 31 அன்று குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சம்மன் அனுப்பியது.
இந்த வழக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 2018 இல் வருமான வரித் துறையால் தாக்கல் செய்யப்பட்டது, அந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் வரி ஏய்ப்பு மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 'ஹவாலா' பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தனது சிறப்பு அரசு வழக்கறிஞர் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது, அதன் அடிப்படையில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பியது. ஜூலை 1ஆம் தேதி அவரை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019 செப்டம்பரில், பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருவில் உள்ள சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆகஸ்ட் 2017 இல் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை சிவக்குமார் தனது ரிசார்ட்டில் விருந்தளித்த பின்னர் இந்த சோதனைகள் நடந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.