ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு
பதேர்வா, கதுவா, தோடா, உதம்பூர், ஜம்மு, கத்ரா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக அளவிடப்பட்டது, மேலும் அதன் மையம் பூமியின் உள்ளே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று (புதன்கிழமை) காலை நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக அளவிடப்பட்டது. காலை 09.15 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் தரையில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. பதேர்வா, கதுவா, தோடா, உதம்பூர், ஜம்மு, கத்ரா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Earthquake of Magnitude:3.0, Occurred on 07-12-2022, 09:15:48 IST, Lat: 32.71 & Long: 75.65, Depth: 10 Km ,Location: 74km ESE of Katra, Jammu and Kashmir, India for more information Download the BhooKamp App https://t.co/2zpFV1x2ro@Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 pic.twitter.com/kxlvQ77e5r
— National Center for Seismology (@NCS_Earthquake) December 7, 2022
செப்டம்பர் மாத நிலநடுக்கம்
முன்னதாக, கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி, ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ராவின் கிழக்கு-வடக்கு-கிழக்கே 62 கிமீ தொலைவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்தது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் காலை 7.52 மணிக்கு அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப் பட்டு வருகிறது.
நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்?
நிலநடுக்கம் ஏற்பட முக்கிய காரணம் பூமிக்குள் சுழன்றுகொண்டு இருக்கும் ஏழு தட்டுகள் மோதுவதுதான். மோதும் போது, அங்கு ஒரு பிழைக் கோடு மண்டலம் உருவாகிறது, மேலும் மேற்பரப்பின் மூலைகள் மடிக்கப்படுகின்றன. மேற்பரப்பின் மூலையின் காரணமாக, அங்கு அழுத்தம் உருவாகிறது மற்றும் தட்டுகள் உடையத் தொடங்குகின்றன. இந்த தகடுகளின் முறிவு காரணமாக, உள்ளே உள்ள ஆற்றல் வெளியே வர ஒரு வழியைத் தேடுகின்றன, அதன் காரணமாக பூமி நடுங்குகிறது, அதை பூகம்பம் அல்லது நிலநடுக்கம் என்று கருதுகிறோம்.
நிலநடுக்கத்தின் பாதிப்புகள்
இதன் தீவிரத்தை ரிக்டர் அளவுகோலில் நிபுணர்கள் அளக்கின்றனர். 2.0 க்கும் குறைவான அளவு நிலநடுக்கங்கள் மைக்ரோ என வகைப்படுத்தப்பட்டுள்ளன, உலகம் முழுவதும் தினமும் 8,000 முறை பதிவு செய்யப்படும் அவற்றை நிலத்தில் இருக்கும் நம்மால் உணர முடியாது. இதேபோல், 2.0 முதல் 2.9 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கங்கள் சிறிய பிரிவில் வகுக்கப்படுகின்றன. அவை தினமும் 1,000 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன, அதை நாம் சாதாரணமாக உணர்வது கூட இல்லை. 3.0 முதல் 3.9 வரையிலான மிக லேசான நிலநடுக்கங்கள் ஆங்காங்கே உணரப்பட்டாலும் பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதில்லை, இவை ஒரு வருடத்தில் 49,000 முறை அவை பதிவு செய்யப்படுகின்றன. 4.0 முதல் 4.9 ரிக்டர் அளவுகோலில் உள்ளவை சிறிய சேதத்தை ஏற்படுத்துவதோடு, உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் 6,200 முறை பதிவு செய்யப்படுகின்றன. ரிக்டர் நான்கிற்கு மேல் வரும் நிலநடுக்கங்கள் தான் பெரிய சேதங்களை அவ்வபோது ஏற்படுத்துகின்றன. மேலும் அவை எவ்வளவு ஆழத்தில் உருவாகின்றன என்பது பொருத்தும் பாதிப்பு மாறுபடும்.