Bharat Jodo Yatra: “ஒரு பெண் இப்படி இருந்தால் திருமணம் செய்து கொள்வேன்” - வருங்கால மனைவி குறித்து மனம் திறந்த ராகுல்காந்தி!
ஜம்மு காஷ்மீரில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி தனக்கு வரப்போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு மிகவும் சுவாரசியமான பதிலை அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி தனக்கு வரப்போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு மிகவும் சுவாரசியமான பதிலை அளித்துள்ளார்.
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியனில் நுழைந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 300 கி.மீ.க்கு மேல் நடைபயணம் நடந்துள்ளது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், இம்மாதம் 30-ந் தேதி யாத்திரை நிறைவடைகிறது.
காஷ்மீரில் நுழைந்து நடைபயணம் தொடர்ந்து வரும் நிலையில், நேற்றைய தினம் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமான பதிலை அளித்தார். தனக்கு ஏற்ற பெண் இருந்தால் திருமணம் செய்து கொள்ள தயார் என்றும், இந்திரா காந்தி தான் என் வாழ்வின் காதலி, இரண்டாம் தாய் என்றார். மேலும் அது போன்ற ஒரு பெண்ணை தான் தேர்வு செய்வேன் என்றார்.
தனக்கு வரப்போகும் பெண் அம்மா சோனியா காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி போல் குண நலன்கள் இருந்தால் நல்லது என ராகுல் காந்தி தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்கத் திட்டமிட்டு, அதன்படி, தற்போது பயணித்து வருகிறார்.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், நடைப்பயணம் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் நடைப்பயணம் தொடங்கியதில் இருந்தே ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளோம். ராகுல்காந்தி அழைப்பின்பேரில், பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி இந்த நிறைவு விழா நடைபெற உள்ளது. அதில் ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தில் நடைப்பயணம் தொடங்கியதில் இருந்தே ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளோம். ராகுல்காந்தி அழைப்பின்பேரில், பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி இந்த நிறைவு விழா நடைபெற உள்ளது.
இந்திய வரலாற்றில் எந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் இவ்வளவு நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டதில்லை என்றும் இதுவே மிக நீண்ட நடைப்பயணம் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஜனவரி 26 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடையும் யாத்திரைக்குப் பிறகு, இந்த பயணத்தின் நோக்கத்தை அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்வதற்காக 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கும்.