Video : கேலி செய்த ஆட்டோ ஓட்டுநர்..? குடிபோதையில் விளாசித்தள்ளிய பெண்கள்.. பரபரப்பு வீடியோ
ஆக்டிவா ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற இந்த இரண்டு பெண்களும் ஆட்டோ ஓட்டுநரை அடித்ததோடு, ஆட்டோ மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
![Video : கேலி செய்த ஆட்டோ ஓட்டுநர்..? குடிபோதையில் விளாசித்தள்ளிய பெண்கள்.. பரபரப்பு வீடியோ Drunk girls assault auto driver over eve teasing in MadhyaPradesh Video : கேலி செய்த ஆட்டோ ஓட்டுநர்..? குடிபோதையில் விளாசித்தள்ளிய பெண்கள்.. பரபரப்பு வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/22/607ae4b332c5b3390a3d6b8885aec85f1661187288936224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குடிபோதையில் பெண்கள் இருவர் தங்கள் கண்களை ஆட்டோ ஓட்டுநர் கேலி செய்ததாகக் கூறி தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசம், குவாலியரில் தங்கள் கண்களைக் கேலி செய்ததாகக் கூறி இரண்டு பெண்கள் போதையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியுள்ளனர். ஆகஸ்ட் 21ஆம் தேதி குவாலியரின் சென்ட்ரல் பார்க் ஹோட்டல் சிட்டி சென்டரில் இந்தச் சம்பவம் நடந்தது.
ஆக்டிவா ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற இந்த இரண்டு பெண்களும் ஆட்டோ ஓட்டுநரை அடித்ததோடு, ஆட்டோ மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
After Noida, meet another Karen from Gwalior, MP.
— a.s.chakravarty (@ajeetkcs) August 22, 2022
Drunk lady verbally abuses auto drivers, manhandles them for alleged eve-teasing.
Police apparently, didn't act against the lady and let her go. pic.twitter.com/ljC7IKUtXH
முன்னதாக ஆட்டோ ஓட்டுநர் தங்கள் இருசக்கர வாகனத்தை தவறான முறையில் ஓவர்டேக் செய்து தங்கள் கண்களை கேலி செய்ததாக வீடியோவில் இரண்டு பெண்களும் குற்றம் சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்தே ஆட்டோவை நெருங்கி இருவரும் ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவ்வழியே சென்று வாகனஓட்டிகளும் பாதசாரிகளும் பெண்களைத் தடுத்தி நிறுத்தி ஆட்டோ ஓட்டுநரை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்பெண்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை சம்பவம்
முன்னதாக இதேபோல் சென்னை அண்ணாநகர் ரவுண்டானா அருகே நள்ளிரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அவர்களுக்குள் நடுரோட்டில் சண்டையிட்டுள்ளனர்.
அப்போது அங்கு சாலைகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுப்பட்டு இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனால் மதுபோதையில் இருந்த அப்பெண்கள், சமாதானம் செய்ய சென்றவர்களிடம் சண்டையிட்டு ஒரு தொழிலாளியின் சட்டையை கிழித்தெறிந்துள்ளனர்.
தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு காவல் துறையினர் சென்ற நிலையிலும், அவர்கள் முன்னிலையில் மதுபோதையில் இருந்த பெண்கள் மற்றும் இரண்டு நபர்களும் துப்பரவுத் தொழிலாளியை அடிக்க முயன்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது
மேலும், தன்னைத் தாக்கி தனது செல்போனை பறித்துச் சென்றதாக காவல்நிலையத்தில் துப்புரவுப் பணியாளர் ஒருவர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Amitshah meet Junior NTR: மல்லுக்கட்டும் மருமகன்.. பேரனுக்கு மடைமாறும் பாஜக! ஜூனியர் என்.டி.ஆரை குறிவைக்கும் அமித்ஷா?!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)