மேலும் அறிய

DMK: ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க தீர்மானம்..! அ.தி.மு.க.வின் தொண்டர்கள் படையை முறியடிக்குமா தி.மு.க.?

 சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

 சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1 கோடி உறுப்பினர்கள்:

வெளியிடப்பட்ட தீர்மானத்தில், ”நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் இன்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞருக்கு வரும் ஜூன்  3ஆம் தேதி நூற்றாண்டு விழா அனுசரிக்கப்படுகிறது. தமிழினத் தலைவர் கலைஞர் அரை நூற்றாண்டு காலம் கட்டி காத்த நம் கழகத்தை மேலும் வலிமைபடுத்த, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க "உடன்பிறப்புகளாய் இணைவோம்” என்ற மாபெரும் முன்னெடுப்பு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3ம் தேதியன்று தொடங்கி கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது. துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடுதோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களைச் கழகத்தில் இணைத்திடுவோம்.

நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு:

தமிழின தலைவர் கலைஞரை தாய் தமிழ்நாட்டிற்கு தந்த திருவாரூரில் ஜூன் 3 அன்று, தலைமை கழகத்தால் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற இருக்கிறது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு “கலைஞர் கோட்டம்” வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை- கட்டிடங்கள் என்று சொல்வதை விட அன்னை தமிழ்நாட்டிற்கும்- இந்திய திருநாட்டிற்கும் தலைவர் கலைஞர் ஆற்றிய பங்களிப்பின் பசுமையான நினைவுச் சின்னங்களாக “கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை” அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள்.

தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். வரும் ஜூன் 3-ஆம் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் - 3 வரை ஓராண்டு காலம் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக கொள்கை விழாவாக - வெற்றி விழாவாக- இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானங்கள்:

 தமிழ் மொழிக் காப்பு - தமிழின உரிமைகள் – தமிழ்நாட்டின் உயர்வு - திராவிடச் சுயமரியாதை - மாநில சுயாட்சி - சகோதரத்துவம் மதச்சார்பின்மை - சாதி ஒழிப்பு - ஒடுக்கப்பட்டோர் நலன் சமூக நீதி– பெண்ணுரிமை – இலக்கிய வளர்ச்சி - கலைத்துறை மேம்பாடு எனப் பலமுனைப் பங்களிப்புகளை தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றி இருக்கிறார்கள். எந்த நோக்கத்துக்காக தனது வாழ்க்கையையே  கலைஞர் ஒப்படைத்துக் கொண்டார்களோ அந்த நோக்கத்துக்காக தலைவர் கலைஞர் வழித்தடத்தடத்தில் அயராது பணியாற்ற இக்கூட்டம் உறுதி ஏற்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget