எல்.கே.ஜிக்கு ரூ.14 லட்சம் ஃபீஸ்! லிஸ்ட்டில் ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் குழந்தைகள்! வாயை பிளக்க வைத்த அம்பானியின் பள்ளி!
திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கிழக்கு பாந்த்ராவில் இயங்கி வருகிறது.
முகேஷ் அம்பானியின் மனைவி நடத்தி வரும் பள்ளியில் எல்.கே.ஜி படிக்க 14 லட்சம் ஃபீஸ் பெறப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பள்ளியில்தான் ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் வாரிசுகள் படித்து வருகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஜான்வி கபூர், சுஹானா கான், குஷி கபூர், இப்ராஹிம் அலிகான், ஆர்யன் கான், சாரா டெண்டுல்கர், நைசா தேவ்கன், அனன்யா பாண்டே ஆகியோரும் இந்த பள்ளியில் படித்துள்ளனர்.
திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கிழக்கு பாந்த்ராவில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியை கடந்த 2003ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி நிறுவினார். மும்பையில் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் அதிகம் வசித்து வருவதால் இப்பள்ளிக்கு மவுசு ஜாஸ்தி. அதுமட்டுமில்லாமல் அம்பானி பள்ளி என்பதால் நீ, நான் என போட்டி போட்டுக்கொண்டு பிள்ளைகளை சேர்க்க வரிசை கட்டிக்கொண்டு நிற்பார்கள்.
இப்பள்ளியின் நிறுவனர் நீத்தா அம்பானி, ரிலையன்ஸ் பவுண்டேசன் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்திய பணக்கார பெண்களில் இவரும் ஒருவர். இவரது சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர் ஆகும். இவரின் பள்ளியில் கிட்டத்தட்ட 1000 பிள்ளைகள் படித்து வருகின்றனர். இங்கே ப்ரிகேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர். இதே பள்ளியில் தான் ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான் என பல பாலிவுட் நட்சத்திறங்களின் பிள்ளைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி ஆண்டு விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் வெளியான தகவல் விழி பிதுங்க வைக்கிறது.
ஒரு பிள்ளையின் படிப்புக்கு லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறது இந்த பள்ளி. இந்த பள்ளியில் ICSE மற்றும் IGCSE ஆகியவற்றுக்கு மாணவர்களைத் தயார்படுத்தி வருகிறது. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளிலேயே சர்வதேச இளங்கலை டிப்ளமோ படிப்பை வழங்க அங்கீகாரம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கும் சர்வதேச கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு ரூ.14 லட்சம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 12 ஆம் வகுப்புக்கு ரூ. 20 லட்சம் கட்டணம் என இந்த பள்ளியில் வாங்கப்படுகிறது. இது தவிர புத்தகங்கள், சீருடைகள், போக்குவரத்து செலவு என பல உள்ளன.