மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Delhi Act: சட்டமாக மாறிய டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதா... ஒப்புதல் அளித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அவசர சட்டத்தை தொடர்ந்து, அதை வழக்கமான சட்டமாக மாற்ற, டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு கொண்டு வந்தது. 

இது டெல்லி அரசின் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்துக்கு சிபாரிசு செய்ய ஒரு ஆணையம் அமைக்கவும், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு இறுதி அதிகாரம் அளிக்கவும் வழி வகை செய்கிறது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மத்தியில் நிறைவேற்றப்பட்ட மசோதா:

கடந்த 3ஆம் தேதி, இந்த மசோதா  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது, மசோதாவை மக்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், அது குரல் வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டது.

குடியரசு தலைவர் ஒப்புதல்:

மற்ற எதிர்க்கட்சிகளின் உதவியோடு, இந்த மசோதாவை தோற்கடிக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சி மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், இந்த மசோதாவுக்கு எதிராக கடும் வாதங்களை எடுத்து வைத்தனர்.

இருப்பினும், ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தளம், ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு, மத்திய பாஜக அரசு மசோதாவை நிறைவேற்றியது.

இந்த நிலையில், டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதை தொடர்ந்து, மசோதா சட்டமாகியுள்ளது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், துணை நிலை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும்  உள்ள அதிகார வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, அதிகாரிகளின் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றை முடிவு செய்ய தேசிய தலைநகர் சிவில் சேவை ஆணையம்  உருவாக்கப்பட உள்ளது.

இதில் முதலமைச்சர்,  முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.  மத்திய அரசால் இரு செயலாளர்களும் நியமிக்கப்படுவார்கள். ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகள் துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரைகளாக அனுப்பப்படும். அவற்றை துணை ஆளுநர் நிராகரிக்கவோ, மறுபரிசீலனைக்கு அனுப்பவோ அதிகாரம் பெற்றுள்ளார்.

தனது சொந்த விருப்பத்தின் பேரில் டெல்லி சட்டப்பேரவையை கூட்டவோ, சட்டப்பேரவை நாட்களை நீடிக்கவோ துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“மணல் மும்மூர்த்திகளிடமிருந்து பறிபோன கான்ட்ராக்ட்” விட்டதை பிடிக்க உதவுகிறாரா ஆடிட்டர் ?

Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில்பாலஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!

Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!

Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி,  மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்

ABP Premium

வீடியோ

Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“மணல் மும்மூர்த்திகளிடமிருந்து பறிபோன கான்ட்ராக்ட்” விட்டதை பிடிக்க உதவுகிறாரா ஆடிட்டர் ?
“மணல் மும்மூர்த்திகளிடமிருந்து பறிபோன கான்ட்ராக்ட்” விட்டதை பிடிக்க உதவுகிறாரா ஆடிட்டர் ?
Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில்பாலஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில்பாலஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!
Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி,  மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி, மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

IPL Auction 2025 LIVE:  ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 

NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?

Varshini Venkat: பிக்பாஸ் வீட்டை விட்டு போகும் போது காதலர்களுக்குள் பிரச்னையை கொளுத்தி போட்டு சென்ற பெண் போட்டியாளர்!

Embed widget