Delhi Airport: "எப்போதும் இல்லாத இளைய பயணியை வரவேற்கிறோம்" - டெல்லி விமான நிலையம் சுவாரஸ்ய ட்வீட்
இதுவரை இல்லாத வகையில் டெல்லி விமான நிலையத்தில் மிகவும் இளைய பயணியான பிறந்த குழந்தையை வரவேற்றதாக டெல்லி விமான நிலையம் ட்வீட் செய்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் டெல்லி விமான நிலையத்தில் மிகவும் இளைய பயணியான பிறந்த குழந்தையை வரவேற்றதாக டெல்லி விமான நிலையம் ட்வீட் செய்துள்ளது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெர்மினல் 3 என்று பிரபலமாக அறியப்படுகிறது, இது இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். டெல்லி விமான நிலையம் பல ஆண்டுகளாக ஏராளமான பயணிகளையும், பல சம்பவங்களை கண்டிருந்தாலும், அவர்கள் தங்கள் 'இளைய பயணி'யை சமீபத்தில் பெற்றுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் ஒரு கர்ப்பிணி பெண் டெர்மினல் 3ல் இருந்த மருத்துவ வசதியின் உதவியுடன் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். புதிதாகப் பிறந்த குழந்தையை டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இளைய பயணி அல்லது முதல் குழந்தையாக அறிவித்தது.
"எப்போதும் இல்லாத இளைய பயணியை வரவேற்கிறோம்! டெர்மினல் 3, மேதாந்தா மருத்துவ வசதியில் முதல் குழந்தையின் வருகையைக் கொண்டாடுகிறோம். தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக உள்ளனர்" என்று டெல்லி விமான நிலையம் செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்தது.
Welcoming the youngest passenger ever!
— Delhi Airport (@DelhiAirport) November 15, 2022
Celebrating the arrival of the First Baby at Terminal 3, Medanta Facility.
Mother and child, both are doing well.#NewBorn #YoungestPassengeratDEL #DELCares pic.twitter.com/BqHZA4WWno
டெல்லி விமான நிலைய T-3 இல், மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், அவசர சிகிச்சைக்காக நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் உள்ளனர். இந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் தயார் நிலையில் உள்ளனர். டெல்லி விமான நிலைய முனையங்களில் உள்ள மேதாந்தா மருத்துவ மையங்கள் அவசர சிகிச்சை மையத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. Fortis மருத்துவ வசதியும் T-3 இல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.