மேலும் அறிய

தத்ரூப ஓவியங்களின் அரசன் ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு

திராவிட பெண்களின் அழகியலை தத்ருப்பமாக தூரிகைகளில் வடித்த தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா தனது 43ஆவது வயதில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்

தத்ரூப ஓவியங்களின் அரசன் என அழைக்கப்படும் ஓவியர் இளையராஜா (வயது 43) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது, அவரது ஓவியத்தை அறிந்த பலரது மத்தியிலும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே செம்பியவரப்பு கிராமத்தில் தச்சுத்தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் ஓவியர் இளையராஜா, கும்பகோணம் ஓவிய கல்லூரியில் பட்டம் பெற்ற அவர். 2003 ஆம் ஆண்டில் நடந்த ஓவியக் காண்காட்சியில் முதன்முறையாக இளையராஜாவின் ஒவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போதே இளையராஜாவின் ஓவியங்கள் பார்வையாளர்களின் கவனம் பெற்றது. 2009ஆம் ஆண்டில் திராவிட பெண்களின் அழகியல் குறித்த கண்காட்சி என்ற பெயரில் அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் கேலரியில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இவரது திராவிட பெண்கள் குறித்த ஓவியங்களை விகடன் இதழ் நிறுவனமே வாங்கி தனது இதழ்களில் வெளியிட்டது. இயக்குநர் பார்த்திபன் இயக்கிய இவன் திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் அப்படத்தில் சிறுவயது பார்த்திபனாகவும் நடித்துள்ளார் ஓவியர் இளையராஜா.

தத்ரூப ஓவியங்களின் அரசன் ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் தனது உறவினரின் திருமணத்திற்காக கும்பகோணம் சென்று சென்னை திரும்பிய நிலையில் சளி தொந்தராவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு ஊரில் அவரது உறவினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்தார். இளையராஜாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி ஓவியர் இளையராஜாவின் உயிர் பிரிந்தது. இளையராஜாவின் ஓவியங்கள் அனைத்தும் மிகத் தனித்துவமானவை, தமிழ்ப்பெண்களின் இயல்புகள், உணர்வுகள், அழகியல் தன்மைகள், முகபாவனைகள் அனைத்தையும் தனது தூரிகைகளால் தத்ரூபமாக கொண்டு வரும் ஆற்றல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

தத்ரூப ஓவியங்களின் அரசன் ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு

தத்ரூப ஓவியங்களின் அரசன் ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு

ஓவியர் இளையராஜாவை பற்றியாத பலரும் சமூகவலைத் தளங்கில் இளையராஜாவின் ஓவியங்களை கட்டாயம் அறிந்திருப்பார்கள். ஆனந்தவிகடனில் அவரும் சிறுகதைகளில் இவரின் ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில். ஒரு காலகட்டத்தில் இளையராஜாவின் ஓவியங்களுக்கு ஏற்ப சிறுகதைகளை எழுதி அனுப்பும் அளவிற்கு எழுத்தாளர்கள் மத்தியில் இளையராஜாவின் ஓவியம் தாக்கம் செலுத்தியது. இந்திய கலாசார அமைப்பின் தேசிய ஆய்வுதவிக்கான விருது, தமிழக அரசின் சிறந்த ஓவியருக்கான விருது, விஜய் தொலைக்காட்சியின் சிறந்த பத்திரிக்கை ஓவியருக்கான விருது ஆகியவை இளையராஜவின் ஓவிய திறமைக்கு சான்றாக விளங்குகிறது, இளையராஜாவின் மரணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயக்குநர்கள் பார்த்திபன் இராதாகிருஷ்ணன், பா.ரஞ்சித், நவீன், விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் ட்விட்டரில் இளையராஜாவின் ஓவியங்களை பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த படங்களை பார்பவர்கள் மனதில் இது ஓவியமா? புகைப்படமா? என்ற கேள்விகள் எழும் வரை இவ்வுலகத்தில் ஓவியர் இளையராஜாவின் புகழ் நிலைத்திருக்கும்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget