மேலும் அறிய

Atrocities On Dalits: தொடரும் சாதீயம்! தலித் நபரை அடித்து முகத்தில் மலத்தைப் பூசி கொடூரம்... அதிர்ச்சி சம்பவம்!

மத்திய பிரசேதத்தில் பட்டியிலன வகுப்பைச் சேர்ந்த நபரின் முகத்தில் மலம் பூசப்பட்ட சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Atrocities On Dalits: மத்திய பிரசேதத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த நபரின் முகத்தில் மலம் பூசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடரும் கொடூரங்கள்:

சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது.சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது, பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பழங்குடி இளைஞர், சிறுமி ஒருவரை காதலித்த காரணத்தால் ஆறு இளைஞர்கள் சேர்ந்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது மத்திய பிரதேசத்தில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

முகத்தில் மலம் பூசிய கொடூரம்:

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் இருந்து 35 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ள பிகௌரா பகுதியில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்கு தஷ்ரத் அஹிர்வார் என்பவர் கட்டுமானம் தொடர்பாக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு பம்ப் ஒன்றில் ராம்கிருபால் படேல் என்பவர் குளித்துக் கொண்டிருந்தார்.  அப்போது, தலித் வகுப்பைச் சேர்ந்த தஷ்ரத் அஹிர்வார் அவரை தவறுதலாக தொட்டு இருக்கிறார். இதில் கட்டுமான பணியின்போது அவர் பயன்படுத்திய கிரீஸானது ராம்கிருபால் படேலின் உடம்பில் பட்டுவிட்டது. இதனால் கோபமடைந்த ராம்கிருபால் தான் குளிக்க பயன்படுத்திய குவளையில் அருகில் கிடந்த மனித மலத்தை எடுத்து வந்து தஷ்ரத் அஹிர்வாரின் உடல், தலை மற்றும் முகத்தில் பூசி இருக்கிறார். மேலும், சாதி பெயரைச் சொல்லியும் கடுமையான வார்த்தைகளில் பேசி, அவமானப்படுத்தியும் இருக்கிறார். 

கைது:

இதனால் விரக்தியில் இருந்த அஹிர்வார் இந்த சம்பவம் குறித்து பேச பஞ்சாயத்தை அணுகி கூட்டத்தை கூட்ட  சொல்லி உள்ளார். ஆனால் அந்த பஞ்சாயத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை தண்டிக்காமல்,  தஷ்ரத் அஹிர்வாருக்கு 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தஷ்ரத் அஹிர்வார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தலித்  நபரின் முகத்தில் மலத்தை பூசிய ராம்கிருபால் படேல் என்று அடையாளம் காணப்பட்டு, அவர் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் 40 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan Kalyan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை  : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Petrol Diesel price hike: புத்தாண்டில் எகிறிய பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?
IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?
Embed widget