Dalai Lama Controversy: சிறுவனுக்கு உதட்டில் முத்தம்.. சர்ச்சைக்குள்ளான தலாய் லாமாவின் செயல்.. குவியும் கண்டனங்கள்
மதகுரு தலாய் லாமா ஒரு சிறுவனிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திபெத் மதகுரு தலாய் லாமா ஒரு சிறுவனிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தலாய் லாமா வீடியோ:
எங்கு, அப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் சம்பவம் தொடர்பான வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில், மேடையில் அமர்ந்து இருக்கும் தலாய் லாமாவிற்கு மரியாதை செலுத்துவதற்காக மேலே வந்துள்ளார். அப்போது அருகே வந்த சிறுவனை பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த அனைவரும் சிரித்துள்ளனர். அதைதொடர்ந்து சில விநாடிகளுக்குப் பிறகு வாயிலிருந்து தனது நாக்கை வெளியே நீட்டிய தலாய் லாமா, அதனை முத்தமிடுமாறு தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார். முதலில் ஆட்சேபனை தெரிவிக்கும் விதமாக சிறுவன் பின்னே சென்றுள்ளான். ஆனால், தலாய் லாமா அவனது கையை பிடித்து இருந்ததால், தலாய் லாமாவின் நாக்கில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளான்.
🤢 This is an alarming scene! The Dalai Lama, who has had ties to NXIVM in the past, caught on camera trying to make advances to an Indian boy.
— NATLY DENISE (@NatlyDenise_) April 9, 2023
You can clearly see the boy's body language as he yanks back the first time, then throws his head upward as the Dalai-Lama says "SUCK… pic.twitter.com/CorBr8tiDz
இதுதொடர்பான வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலாய் லாமா செய்தது அத்துமீறல் என ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வர, மற்றொரு தரப்பினரோ தலாய் லாமா விளையாட்டாகவே சிறுவனுக்கு முத்தமிட்டார் என நியாயப்படுத்தி வருகின்றனர். அதேநேரம், இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக தொல்லை செய்வது சட்டவிரோத செயல். மேலும் இந்த குற்றச்செயல் செய்தவரின் மீது போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் சர்ச்சை:
தலாய் லாமா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டில், "கவர்ச்சிகரமானதாக" இருக்க வேண்டும் என்று கூறி, ஒரு பெண் தோற்றத்தைப் பற்றி கூறிய கருத்திற்கு உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. தலாய் லாமாவின் கருத்துக்கள் "பாலியல் சார்ந்தவை" என்று பரவலாக விமர்சிக்கப்பட்டதை அடுத்து, தலாய் லாமா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
இந்தியாவில் தலாய் லாமா:
சீனாவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற கலகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் தலாய் லாமா, தௌலாதார் மலைத்தொடரில் அமைந்துள்ள புத்த மடத்தை விட்டு இந்தியாவின் தர்மசாலாவில் குடியேறி ஏறத்தாழ 60 ஆண்டுகள் ஆகிவிட்டன.