மேலும் அறிய

Cyclone Michaung: நொடி பொழுதில் காரின் மீது சரிந்த கட்டிடம்; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்; பதைபதைக்க வைக்கும் வீடியோ

Cyclone Michaung: மிக்ஜாம் புயல் சென்னையைக் கடந்து ஆந்திராவில் தனது கோரதாண்டவத்தினை நடத்தியுள்ளது.

மிக்ஜாம் புயலின் தாக்கம் கூட்டு சித்தூர் மாவட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் திருப்பதி நகர் சென்னரெட்டி காலனியில் திங்கள்கிழமை இரவு அதாவது டிசம்பர் 4ஆம் தேதி  கட்டிடம் இடிந்து விழுந்தது. அதே நேரத்தில் கட்டிடத்தின் முன் நின்றுகொண்டு இருந்த இருவர் காயமடைந்தனர். கார்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்ததால் காரும் சேதமடைந்தது.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரெட் அலார்ட்

ஆந்திராவில் உள்ள பாபட்லா, பிரகாசம், பல்நாடு, குண்டூர், கிருஷ்ணா, என்டிஆர், பிஏ, ஏலூர், கோனசீமா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜாம் புயலில் கோரதாண்டவத்தால் ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்டத்தில் 25.1 ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.  யாடமாரி, கார்வேடிநகரம், புலிச்சேர்லா, பலமனேரு, ஸ்ரீகாளஹஸ்தி, நாகலாபுரம், சத்தியவேடு, திருப்பதி போன்ற பகுதிகளில் வேளாண் பயிர்களின் சேதம் என்பது அதிகப்படியாக ஏற்பட்டுள்ளது என வேளாண் துறையினர் மதிப்பிட்டுள்ளனர். 

சித்தூர், குடிபாலா, பலமனேரு, பெனுமுரு போன்ற பகுதிகளில் மழை வெள்ளம் நேரத்திற்கு நேரம் அதிகமாகி உள்ளது. பெனுமுரு மண்டல் மற்றும் கல்வகுண்ட்லா என்டிஆர் நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளது. மல்லேமடுகு ஏரியில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயலின் தாக்கத்தால், திருமலை ஐனா பாபவினாசனம், ஆகாசகங்கா, குமால்தாரா, குமாரதாரா, கோகர்பம் ஆகிய ஐந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் முற்றிலும் நிரம்பின. சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து வெள்ள நீர் வருவதால் பாபவினாசனம் அணை முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் நேற்று இரவு ஒரு கதவணை மட்டும் அதிகாரிகள் திறந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. காட் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்

10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியா? துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், எப்படி தெரியுமா?

Rasipalan: தனுசுக்கு அனுசரிப்பு தேவை; மகரத்துக்கு திறமை: இன்றைய ராசிபலன்கள் இதோ..!

Travel With ABP : புதுச்சேரி ஊசுடு ஏரியில் படகு சவாரி... கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு..

for smartphones
and tablets

வீடியோ

KPK Jayakumar Death | பெண்ணுடன்  தொடர்பு? போலீஸ் ரேடாரில் மகன்கள்..வெளியான பகீர் தகவல்!Petrol Bunk Theft | பெட்ரோல் பங்கில் வழிப்பறி..அரிவாள் காட்டி மிரட்டல்!பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!10th Results | மாநிலத்தில் முதலிடம் பெற்ற கூலித் தொழிலாளியின் மகள்! ’’நான் IAS ஆவேன்’’Mohan Press Meet | GOAT அப்டேட்! போட்டுடைத்த மோகன்..கலகல PRESS MEET

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியா? துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், எப்படி தெரியுமா?
10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியா? துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், எப்படி தெரியுமா?
Rasipalan: தனுசுக்கு அனுசரிப்பு தேவை; மகரத்துக்கு திறமை: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Rasipalan: தனுசுக்கு அனுசரிப்பு தேவை; மகரத்துக்கு திறமை: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Travel With ABP : புதுச்சேரி ஊசுடு ஏரியில் படகு சவாரி... கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு..
Travel With ABP : புதுச்சேரி ஊசுடு ஏரியில் படகு சவாரி... கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு..
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?

GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!

"பயில்வான் ரங்கநாதன் - ஷகிலா மோதல் விவகாரம்" அஜர்பைஜான் தூதர் ஆதங்கத்துடன் சொன்ன அறிவுரை!
WhatsApp: உங்க வாட்ஸ் அப் மாறியிருக்கிறதா? புதிய அப்டேட் வந்தாச்சு - என்னன்னு தெரியுமா?

Embed widget