2022 இரண்டாம் பாதியில் அரசுத் துறைகள் மீதான சைபர் தாக்குதல் 95% அதிகரிப்பு: வெளியான ரிப்போர்ட்
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய அரசுத் துறைகள் மீதான சைபர் அட்டாக் 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இவற்றில் ஈடுபட்டது மலேசியாவின் ட்ராகன் ஃபோர்ஸ், ஹேக்டிவிஸ்ட் குழுமம் என்று கூறப்படுகிறது.
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய அரசுத் துறைகள் மீதான சைபர் அட்டாக் 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இவற்றில் ஈடுபட்டது மலேசியாவின் ட்ராகன் ஃபோர்ஸ், ஹேக்டிவிஸ்ட் குழுமம் என்று கூறப்படுகிறது. #OpIndia, #OpsPatuk போன்ற பிரச்சாரங்கள் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று CloudSEK என்ற சைபர் தாக்குதல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற ஃபிஷிங் நிறுவனங்களின் எளிதான குறியாக அரசு துறைகளின் இணையதளங்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எய்ம்ஸ் ஹேக்கிங்:
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஹேக்கிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் ஹேக்கிங் தான். அதை ஹேக் செய்தவர்கள் 200 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி அளிக்க வேண்டும் என பேரம் பேசியுள்ளனர்.
நாட்டின் தலைசிறந்த மருத்துவமனையாக இருப்பது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனைதான். மத்திய மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய மருத்துவமனைகள் நாடு முழுவதும் பல இருந்தாலும், நாட்டின் முதல் குடிமகன் முதல் சாமினியன் வரை அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது என்றால் அது உண்மைதான்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் அவர்களது நோயின் தன்மை குறித்த தகவல்கள் அடங்கிய எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் ஹேக்கர்களால் கடந்த வாரம் புதன் கிழமை முடக்கப்பட்டது. முதலில் சர்வர் மிகவும் மந்தமாக செயல்படுகிறது. சிறிது நேரத்தில் சரி செய்து விடலாம் என நினைத்த டெக்னீசியன்ஸ், அதன் பின்னர் தான் சர்வர் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
ஹேக் செய்யப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை திரும்ப ஒப்படைக்க ஹேக்கர்கள் 200 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி தர வேண்டும் என பேரம் பேசியுனர். எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரில் முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், பிரதிநிதிகள், நீதிபதிகள் உட்பட நாட்டின் குடிமக்களில் சுமார் மூன்று முதல் நான்கு கோடி மக்களின் தரவுகள் அவற்றில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக ஜல் சக்தி துறை இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. அது போலவே, ரயில்வே துறையில் நேற்று 3 கோடி பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்களை திருடியதாக தகவல் வெளியானது. ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் பெயர், மின்அஞ்சல், செல்போன் எண், பாலினம், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ரயில்வே இணையதளத்தில் இருக்கும். அங்கிருந்தே தகவல் திருடப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்திய ரயில்வேயும் சரி மத்திய அரசும் சரி அதனை திட்டவட்டமாக மறுத்தது.