(Source: ECI/ABP News/ABP Majha)
ஊரகப் பகுதிகளில் பொருளாதாரத்தை மேம்படுத்த, வணிகமயமாக்கலை ஊக்குவிக்க திட்டம்.!
கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சி.எஸ்.ஐ.ஆர்-சி.எஃப்.டி.ஆர்.ஐ.யின் புதுமையான உணவு தொழில்நுட்பங்களை இந்த நிகழ்வு காட்சிப்படுத்தியது.
சிஎஸ்ஐஆர்-தேசிய அறிவியல் தகவல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையம், சிஎஸ்ஐஆர்- மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (சிஎஃடிஆர்ஐ) உன்னத பாரத இயக்கம் மற்றும் விஞ்ஞான பாரதி ஆகியவற்றுடன் இணைந்து, மைசூருவில் உள்ள சிஎஸ்ஐஆர்- சிஎஃப்டிஆர்ஐ-ல் 2024 செப்டம்பர் 19-20 தேதிகளில், இரண்டு நாள் "சிஎஃப்டிஆர்ஐ உணவு மற்றும் சிறுதானிய தொழில்நுட்பங்களின் தொழில்நுட்ப காட்சிப்படுத்தல் மற்றும் நெட்வொர்க்கிங் சந்திப்பை" ஏற்பாடு செய்தது. கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சி.எஸ்.ஐ.ஆர்-சி.எஃப்.டி.ஆர்.ஐ.யின் புதுமையான உணவு தொழில்நுட்பங்களை இந்த நிகழ்வு காட்சிப்படுத்தியது.
உணவு அறிவியல் ஆராய்ச்சியில் முன்னோடியாக, சிஎஸ்ஐஆர்சிஎஃப்டிஆர்ஐ உணவு பதனப்படுத்துதல், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அவர்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட பரந்த அளவிலான உணவுப் பொருட்களை உள்ளடக்கியது.
Do join us at Hall 14 of #BharatMandapam during #worldfoodindia2024 @CSIR_IND #sustainablepackaging pic.twitter.com/dQbdEzf5kI
— CSIR.NIIST (@csir_niist) September 18, 2024
நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்களின் நலனுக்காக சி.எஸ்.ஐ.ஆர்- சி.எஃப்.டி.ஆர்.ஐ உருவாக்கிய உணவு தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துவதும் நிரூபிப்பதும் இந்த நிகழ்வின் முதன்மை நோக்கமாகும்.
மேலும், கிராமப்புறங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இந்த தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம்; உணவு பதனப்படுத்துதல் மற்றும் வேளாண் உற்பத்தியில் உள்ள முக்கிய சவால்களை அடையாளம் காணுதல், ஊரகப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கான உத்திகள்.
தொழில்துறை வல்லுநர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து பரந்த அளவிலான பங்குதாரர்களுக்கு இந்த கண்டுபிடிப்புகளை நிரூபிக்கக்கூடிய ஒரு தளத்தை வழங்குவதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது, கிராமப்புறங்களில் ஒத்துழைப்பை அடைவதற்கும், தொழில்நுட்பத்தை ஏற்பதை ஊக்குவிப்பதற்கும், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வணிகமயமாக்கலுக்கும் உணவுத் தொழில் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் நிலையான வளர்ச்சி ஆகியவையும் இதன் நோக்கமாகும்.