RP Singh father death: கிரிக்கெட் உலகில் நீண்டுகொண்டே இருக்கும் இழப்புப் பட்டியல் - RP சிங்கின் தந்தை காலமானார்..
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த RP சிங்கின் தந்தை ஷிவ் பிரசாத் சிங் காலமானார்.
முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் RP சிங் தந்தை காலமானார். கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த RP சிங்கின் தந்தை ஷிவ் பிரசாத் சிங் காலமான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் RP சிங்.
It is with deepest grief and sadness we inform the passing away of my father, Mr Shiv Prasad Singh. He left for his heavenly abode on 12th May after suffering from Covid. We request you to keep my beloved father in your thoughts and prayers. RIP Papa. ॐ नमः शिवाय 🙏🙏
— R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) May 12, 2021
"மிகுந்த துக்கத்துடனும், வருத்தத்துடனும் இதை பதிவு செய்கிறேன், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த என் தந்தை கடவுளை அடைந்து இருக்கிறார். அமைதியாக ஓய்வெடுங்கள் அப்பா" என RP சிங் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே ஐ.பி.எல் வீரர்கள் சிலருக்கு கொரோன தொற்று ஏற்பட்ட நிலையில், கிரிக்கெட் வீரர்களின் குடும்பங்களும் பெரும் அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. தோனியின் பெற்றோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அஸ்வின் குடும்பத்தில் பலருக்கு நோய் தொற்று ஏற்பட்டது, இந்திய கிரிக்கெட் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தி தனது தாய் மற்றும் சகோதரி இருவரையும் பறி கொடுத்துள்ளார், இளம் வீரர் சேத்தன் சக்காரியாவின் தந்தை மரணம், பியூஷ் சாவ்லாவின் தந்தையும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் உயிரிழந்தார். தற்போது ஆர்.பி சிங் தந்தையும் கொரோன நோய்க்கு பலியாகியுள்ளார். கடந்த சில நாட்களில் ஏற்பட்டுள்ள இந்த தொடர் மரணங்கள், கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் பலர் ட்விட்டர் வலைத்தளத்தில் RP சிங் தந்தை மறைவிற்கு தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்..
Saddened by the demise of @rpsingh father. Heartfelt Condolences to you & your family brother. May his soul RIP, Om Shanti🙏
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 12, 2021
May god give you and your family strength to go pass this demise🙏
— Irfan Pathan (@IrfanPathan) May 12, 2021
Sorry to hear about your pops rp... stay strong buddy 🙏
— Herschelle Gibbs (@hershybru) May 12, 2021