மேலும் அறிய

ஜடேஜாவின் மனைவி ரிவபா அசத்தல் வெற்றி...57 சதவிகித வாக்குகளை பெற்று சாதனை...அமைச்சர் பதவி கிடைக்குமா?

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாக குஜராத் இருப்பதால் அங்கு நடைபெற்ற தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. அனைவரும் எதிர்பார்த்தபடியே, குஜராத் தேர்தலில் அசுர பலத்துடன் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 154 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதன் மூலம் வரலாறு படைத்திறுக்கிறது பாஜக.  இந்த தேர்தலில், பல கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிகழ்ந்திருக்கிறது.

இந்திய அரசியலையும் கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது. பல கிரிக்கெட் வீரர்கள் இந்திய அரசியலில் ஜொலித்திருக்கிறார்கள். அதன் தொடரச்சியாக, இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்திருக்கிறார் ரிவபா. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட முதலில், அவர் பின்தங்கியிருந்த போதிலும், வாக்குகள் எண்ண அவரின் வெற்றி உறுதியானது. பதிவான வாக்குகளில் 60 விழுக்காடு வாக்குகளை பெற்ற பெரிய வெற்றியை பெற்றுள்ளார். 

ஜம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் 84,000க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். அந்த தொகுதியில் இரண்டாவது இடத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளரும் உள்ளனர். கடந்த தேர்தலில், பாஜக வேட்பாளராக தர்மேந்திர சிங் ஜடேஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்த முறை, ஜடேஜாவின் மனைவி ரிவபாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தொகுதியில், ஜடேஜாவின் மனைவியை எதிர்த்து ஜடேஜாவின் தந்தையும் தங்கையும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். இருப்பினும், அந்த தொகுதியில் ரிவபா வெற்றி பெற்றுள்ளார்.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதால், அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த தேர்தலில், 154 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் 6 தொகுதிகளில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பலத்த போட்டி காணப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் அது சற்று குறைவாகவே இருந்தது.

2017 தேர்தலில், 99 தொகுதிகளில் பாஜகவும் 78 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், இந்த முறையோ முடிவுகள் முழுவதுமாக மாறியுள்ளது. அதற்கு காரணம் ஆம் ஆத்மி ஏற்படுத்திய தாக்கம் என்றே கூறப்படுகிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே இடையே நிலவிய மும்முனை போட்டி இறுதியில் பாஜகவுக்கு சாதமாக அமைந்துள்ளது.

பொதுவாக நகர்ப்புற தொகுதிகளை பொறுத்தவரை, பாஜக பலம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் காங்கிரஸ் அதிக பலத்துடன் காணப்படும். ஆனால், இந்த முறை நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் பாஜகவே வெற்றிபெற்றுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bike Sales: நாட்டிலே நம்பர் 1 ஸ்ப்ளண்டர் தான்.. சக்கைப்போடு சேல்.. ஜுலையில் மாஸ் காட்டிய டூவீலர்கள் இதுதான்!
Bike Sales: நாட்டிலே நம்பர் 1 ஸ்ப்ளண்டர் தான்.. சக்கைப்போடு சேல்.. ஜுலையில் மாஸ் காட்டிய டூவீலர்கள் இதுதான்!
லண்டன், ஜெர்மனிக்குப் பறக்கும் முதல்வர் ஸ்டாலின்- தேதி வாரியாக 10 நாள் பயண விவரம் இதோ!
லண்டன், ஜெர்மனிக்குப் பறக்கும் முதல்வர் ஸ்டாலின்- தேதி வாரியாக 10 நாள் பயண விவரம் இதோ!
TN Weather Update: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
Crude Oil Import: அமலுக்கு வரும் அமெரிக்க வரி; 18 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி சரிவு
அமலுக்கு வரும் அமெரிக்க வரி; 18 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி சரிவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bike Sales: நாட்டிலே நம்பர் 1 ஸ்ப்ளண்டர் தான்.. சக்கைப்போடு சேல்.. ஜுலையில் மாஸ் காட்டிய டூவீலர்கள் இதுதான்!
Bike Sales: நாட்டிலே நம்பர் 1 ஸ்ப்ளண்டர் தான்.. சக்கைப்போடு சேல்.. ஜுலையில் மாஸ் காட்டிய டூவீலர்கள் இதுதான்!
லண்டன், ஜெர்மனிக்குப் பறக்கும் முதல்வர் ஸ்டாலின்- தேதி வாரியாக 10 நாள் பயண விவரம் இதோ!
லண்டன், ஜெர்மனிக்குப் பறக்கும் முதல்வர் ஸ்டாலின்- தேதி வாரியாக 10 நாள் பயண விவரம் இதோ!
TN Weather Update: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
Crude Oil Import: அமலுக்கு வரும் அமெரிக்க வரி; 18 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி சரிவு
அமலுக்கு வரும் அமெரிக்க வரி; 18 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி சரிவு
Trump Vs China: “சீனாவ அழிக்க முடியும், ஆனா..“; ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் - 200% வரி விதிப்பதாகவும் அச்சுறுத்தல்
“சீனாவ அழிக்க முடியும், ஆனா..“; ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் - 200% வரி விதிப்பதாகவும் அச்சுறுத்தல்
Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
Top Mileage Scooters: லிட்டருக்கு 70 கிமீ., இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் - ஆக்டிவா இல்லாமல் லிஸ்டா?
Top Mileage Scooters: லிட்டருக்கு 70 கிமீ., இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் - ஆக்டிவா இல்லாமல் லிஸ்டா?
Embed widget