மேலும் அறிய

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர் கவனத்துக்கு..!

தமிழ்நாட்டைப் பொருத்தவரை மொத்தம் 36 குழந்தைகள் தங்களது இரண்டு பெற்றோரையும் இழந்துள்ளனர். 1100 குழந்தைகள் வரை தங்களது பெற்றோரில் ஒருவரை கொரோனாவுக்குப் பறிகொடுத்துள்ளனர்

கோலிகுண்டுகள் போன்ற கருகரு கண்மணிகளைக் கொண்ட கண்களை மெல்லத் திறந்து விழித்துப் பார்க்கிறாள் குழந்தை லாவண்யா. பிறந்து பத்து நாளே ஆகிறது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா-நஞ்சுண்டகௌடா தம்பதியர் குழந்தை வேண்டுமென்று ஊரில் உள்ள மருத்துவமனைப்படிகளெல்லாம் ஏறிப் பலகாலம் காத்திருந்த கண்ணுக்குப்புலப்படாத எதன்மீதோ வைத்த நம்பிக்கைக்கு உருவான சிசு அவள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்டகாலம் நிலைக்கவில்லை. அவள் பிறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு அவளது தந்தை கொரோனா பாதிப்பால் இறந்தார். அவள் பிறந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு அவளது தாய் கொரோனா பாதிப்பால் இறந்தார். குழந்தைக்குப் பெயர் வைக்கக் கூட யாருமில்லாத நிலையில் மாண்டியா அரசு மருத்துவமனைச் செவிலியர்களே அவளுக்கு லாவண்யா எனப் பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.குழந்தை லாவண்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் தற்போது அவள் குணமடைந்துவிட்டாள்.  குழந்தையின் உறவினர்கள் அவளை மருத்துவமனைக்கு வந்து எடுத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வரவில்லை என்றால் அந்தப் பிஞ்சுக்குழந்தை குழந்தைகள் நல ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுவாள்.

கொரோனாவின் கோர முகம் சமூகத்தின் வேரை எத்தனை ஆழமாக பாதித்திருக்கிறது என்பதற்கு தன் தாய் தந்தையை இழந்த குழந்தை லாவண்யா ஒரு உதாரணம்.

கொரோனா தொடர்பான அத்தனை பாதிப்புகள் குறித்தும் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரித்துவரும் நிலையில் கடந்த 1 ஜூன்’21 லாவண்யா போன்று இரண்டு பெற்றோர்களையும் பறிகொடுத்த குழந்தைகள் குறித்த புள்ளிவிவரத்தை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நீதிமன்றத்தில் அளித்தது.அந்தப் புள்ளிவிவரத்தின்படி கொரோனா காரணமாக இதுவரை மொத்தம் 9300 குழந்தைகள் கொரோனா காரணமாகத் தங்களது பெற்றோரை இழந்திருக்கிறார்கள் அல்லது கைவிடப்பட்டிருக்கிறார்கள்.இதில் 1700 குழந்தைகள் தங்களது பெற்றோர் இருவரையுமே இழந்தவர்கள்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்திடம் இதுகுறித்த புள்ளிவிவரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றாலும் குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் கொடுத்த புள்ளிவிவரத்தின்படி மொத்தம் 36 குழந்தைகள் தங்களது இரண்டு பெற்றோரையும் இழந்துள்ளனர். 1100 குழந்தைகள் வரை தங்களது பெற்றோரில் ஒருவரைக் கொரோனாவுக்குப் பறிகொடுத்துள்ளனர்.

மொத்தம் 9300 குழந்தைகள் கொரோனா காரணமாகத் தங்களது பெற்றோரை இழந்திருக்கிறார்கள் அல்லது கைவிடப்பட்டிருக்கிறார்கள்.இதில் 1700 குழந்தைகள் தங்களது பெற்றோர் இருவரையுமே இழந்தவர்கள்.

இந்தக் குழந்தைகளின் நிலை என்ன?

தமிழ்நாட்டைப் பொருத்தவரை தங்களது இரண்டு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் உதவித்தொகையும் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைக்கு 3 லட்ச ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார் பயனாளிகள் தங்களுக்கு 18 வயதுப் பூர்த்தியாகும் நிலையில் அதற்கான வட்டியுடன் கூடிய பயனை அடைவார்கள் என அறிவிக்கப்பட்டது.இதுதவிர இரண்டு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளது கல்லூரிப் படிப்பு வரை அவர்களது கல்விச்செலவு மற்றும் விடுதிச் செலவு ஆகியவற்றை அரசே பார்த்துக் கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டது.  இன்னும் மற்ற மாநில அரசுகள் இதுகுறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர் கவனத்துக்கு..!

அரசின் 1098 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளவேண்டும்

மற்றொரு பக்கம் சந்தை விற்பனைகளுக்காக இந்த குழந்தைகளைக் கடத்துவது (child trafficking) போன்றவையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.கடந்த வாரங்களில் கொரோனாவால் ஆதரவற்று விடப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ளச் சொல்லி சில வாட்சப் ஃபார்வாட்டுகள் வந்தன.ஆனால் அரசு அதிகாரிகள் அதனை விசாரித்ததில் அவை வதந்தி எனத் தெரியவந்தது. இவ்வாறு வாட்சப் வழியாகக் குழந்தைகளைத் தத்தெடுக்கச் சொல்லும் விளம்பரங்கள் பெரும்பாலும் அவர்களை விற்கும் தரகர்களாக இருக்கிறார்கள் என அந்த அதிகாரிகள் எச்சரித்தனர்.அரசு அதிகாரிகள் தலையீடு இல்லாத இப்படியான நேரடியாகத் தத்தெடுக்கும் முறை சட்டத்துக்குபுறம்பானது எனக் கூறப்படுவது இது போன்று பிள்ளைகள் விற்கப்படும் காரணத்தால்தான்.

ஆக இதுபோன்று குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்ளச் சொல்லி வாட்சப் செய்திகள் வந்தாலோ அல்லது காவல்துறையே சொன்னாலோ கூட உடனடியாக அரசின் 1098 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளவேண்டும்.உங்கள் தகவலின் அடிப்படையில் குழந்தைகள் நல ஆணையத்திலிருந்து உடனடியாக வந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்வார்கள். இதனை அண்மையில் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணியும் வலியுறுத்தியிருந்தார்.

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புபவர்கள் என்ன செய்யவேண்டும்?

பொதுவாகவே குழந்தைகளைத் தத்தெடுப்பது என்பது மிக நீண்ட செயல்முறை.குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புபவர்கள் மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு அதிகார அலுவலகத்தில்(Central adoption resource authority-CARA) தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும். பதிவு செய்த சில காலத்துக்குப் பிறகு அதற்கான அதிகாரிகள் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் அவரது வீடு மற்றும் அவரது சொத்து வருமான விபரத்தை ஆய்வு செய்வார்கள். குழந்தைகள் வளர ஆரோக்கியமான சூழல் இருக்கும் நிலையில் ஆதரவற்று இருக்கும் குழந்தை ஒன்று அவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கடுத்து மேலதிக நடைமுறைகளைப் பின்பற்றி பெற்றோர்கள் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.

பெரும்பாலும் பராமரிப்பு மையங்களில் வளருவதைக் குழந்தைகள் விரும்புவதில்லை. அதுபோன்ற சூழல்களில் தத்துக் கொடுப்பதே சரியான தீர்வாக இருக்கிறது.அரசு உதவித்தொகை வழங்கி கல்லூரி வரைப் படிக்கவைத்தாலும் பெற்றோரின் அக்கறையும் அரவணைப்பும் அதில் நிச்சயம் கிடைக்காது. அந்தச் சமயங்களில் தத்தெடுப்பதுதான் தீர்வு என்கின்றனர் தனியார் தன்னார்வக் குழந்தைகள் பராமரிப்பு அமைப்பினர்.  

தத்தெடுப்பது அருஞ்செயல்! அதனைச் சட்டப்படிச் செய்வோம்!.

Also Read: சிபிஎஸ்இ தேர்வு ரத்து: தமிழ்நாடு மாணவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget