மேலும் அறிய

Covid: ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு.. 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா.. மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்..!

இந்தியாவில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Covid : இந்தியாவில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,890 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,433ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விகிதம் 1.56 சதவிகிதமாக உள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களின் வார விகிதம் 1.29 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.47 கோடியாக உள்ளது.

இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை:

இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 831ஆக உயர்ந்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு இறப்பு பதிவாகியுள்ளது. கேரளாவில் 3 இறப்புகள் பதிவாகி உள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவரின் விகிதம் 1.19 சதவிகிதமாக உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 831 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 9,433ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 832 அதிகமாகும்.  இதுவரை, 220.65 கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பிரதமர் மோடி அறிவுரை

இந்நிலையில், நாட்டின் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.  பிரதமர்  மோடி கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3ஆம் தேதி 'மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், இன்று 99வது 'மன் கி பாத்’  நிகழ்ச்சியில் பேசிய அவர், ”நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிவதோடு, கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க

Rahul Gandhi Twitter Bio: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி..! பயோவை மாற்றி ட்விட்டரை அலறவிட்ட ராகுல்காந்தி..!

தலைப்பு செய்திகள்

Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget