மேலும் அறிய

Coronavirus Cases India: தினசரி கொரோனா இன்று அதிகரிப்பு, பலி மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் இரண்டாவது நாளாக ஒன்றரை லட்சத்திற்கு கீழ் ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று 2,700 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழப்பு மீண்டும் 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.

மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


Coronavirus Cases India: தினசரி கொரோனா இன்று அதிகரிப்பு, பலி மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியது

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 1.52 லட்சம், நேற்று 1.27 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 1.32 லட்சமாக அதிகரித்துள்ளது. 

அடுத்தடுத்து ஆறுதல்; குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு!

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரேநாளில் ஒரு  லட்சத்து  32 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்து 75 ஆயிரத்து 44இல் இருந்து 2 கோடியே 83 லட்சத்து 7 ஆயிரத்து 832-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 207 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 895-ல் இருந்து 3 லட்சத்து 35 ஆயிரத்து 102-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 456 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 59 லட்சத்து 47 ஆயிரத்து 629இல் இருந்து 2 கோடியே 61 லட்சத்து 79 ஆயிரத்து 85 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 2,700 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மீண்டும் 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 92.09 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17 லட்சத்து 93 ஆயிரத்து 642-ஆக குறைந்துள்ளது.  இதுவரை 21 கோடியே 85 லட்சத்து 46 ஆயிரத்து 667 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். 

594 டாக்டர்களை காவு வாங்கிய 2வது அலை; தமிழகத்தில் 21 டாக்டர்கள் பலி!

 

 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget