Congress Poll Rules : எழுந்த கலகக்குரல்...தேர்தல் விதிகளை மாற்றியமைத்த காங்கிரஸ்...
உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூத்த தலைவர்களில் ஒரு பிரிவினர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்ய அக்கட்சித் தலைமை ஒப்புக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூத்த தலைவர்களில் ஒரு பிரிவினர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்ய அக்கட்சித் தலைமை ஒப்புக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பும் எவர் வேண்டுமானாலும், கட்சியின் 9,000 பிரதிநிதிகள் அடங்கிய பட்டியலைப் பார்க்கலாம் என்றும் இந்த பட்டியல் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.
உள்கட்சி தேர்தல் வெளிப்படைத்தன்மையாகவும் நேர்மையாகவும் நடத்தக் கோரி மிஸ்திரிக்கு சசி தரூர், கார்த்தி சிதம்பரம் மற்றும் மணீஷ் திவாரி உள்ளிட்ட ஐந்து எம்பிக்கள் கடிதம் எழுதியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தல், அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு, செப்டம்பர் 24 முதல் 30 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த 10 பிரதிநிதிகளின் பெயர்களை மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து எடுத்து கொள்ளலாம் என கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவரான மிஸ்திரி கூறியுள்ளார். வேட்புமனுவில் கையொப்பமிட்டு, தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்ததும், தேர்தலில் வாக்களிக்க போகும் உறுப்பினர்கள் அடங்கிய முழு பட்டியலையும் பெற்றுக் கொள்ளலாம் என எம்பிக்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பத்து ஆதரவாளர்களிடமிருந்து வேட்புமனுக்களை யாராவது பெற விரும்பினால், 9000+ பிரதிநிதிகளின் பட்டியல் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் (காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை) டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கிடைக்கும்.
பட்டியலிலிருந்து அவர்களின் 10 ஆதரவாளர்களை (பிரதிநிதிகள்) தேர்வு செய்து, அவர்களின் (பிரதிநிதிகள்) கையொப்பத்தை வேட்பு மனு தாக்கலுக்காக பெற்று கொள்ளலாம். வாக்காளர்களின் பெயர்கள் தெரியாமல் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் செயல்முறை குறித்த அனைவரின் கவலையை இது தீர்க்க வேண்டும்.
வேட்புமனுவில் கையொப்பமிடப்பட்டு, தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதும், அவர்கள் வாக்காளர்களின் முழு பட்டியலும் அவர்களுக்கு வழங்கப்படும். கடிதத்தில் கையெழுத்திட்டவர்களின் தேவைகளை இது பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். இன்று என்னை அழைத்து உரையாடியதற்காக சசி தரூருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என மதுசூதன் மிஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.