மேலும் அறிய

Manipur Violence: ’ஏன் ஓடி ஒளிஞ்சுக்கிறீங்க’..மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய காங்கிரஸ்!

அமைச்சர்களுக்கு பின்னால் பிரதமர் மோடி ஓடி ஒளிந்து கொள்வதாக காங்கிரஸ் கடுமையாக சாட்டியுள்ளது.

மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு, இனக்கலவரம் இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்து வந்தாலும் பிரதமர் மோடி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். ஆனால், மக்கள் மத்தியில் மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோ ஏற்படுத்திய தாக்கம், அவரை வாய் திறந்து கண்டிக்க வைத்தது.

மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள்:

இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் அடங்காத நிலையில், மனித நேயத்தை கேள்விக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. குறிப்பாக, பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில், மேலும் இரண்டு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கலவரத்தின்போது, 800 பேர் சேர்ந்து ஒரு இளைஞரை அடித்து கொலை செய்துள்ளனர். கேட்கும்போதே மனதை உலுக்கும் இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.

நாடாளுமன்றத்தை உலுக்கிய மணிப்பூர் விவகாரம்:

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்த விடாமல் எதிர்க்கட்சியினர் முடக்கி வருகின்றனர். மணிப்பூர் தொடர்பாக விவாதிக்க 15 எம்பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விதி எண் 267இன் கீழ் அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், விதி எண் 176இன் கீழ் குறுகிய கால விவாதத்திற்கு மத்திய அரசு சம்மதித்துள்ளது. இதனால், வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை என இரண்டு நாள்களுமே நாடாளுமன்றம் முடங்கியது.  

இந்த நிலையில், அமைச்சர்களுக்கு பின்னால் பிரதமர் மோடி ஓடி ஒளிந்து கொள்வதாக காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே. சி. வேணுகோபால், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கேள்விகளை நேரடியாக எதிர்கொள்ள பிரதமர் பயப்படுவதால் நாடாளுமன்றம் செயலிழந்துள்ளது. 

அவர் (மோடி) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சபைக்குள் நுழைய மறுக்கிறார். உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மணிப்பூர் சிக்கியுள்ளது. ஆனால், பிரதமர் தனக்குக் கீழுள்ள அமைச்சர்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார். இந்த நெருக்கடியை கட்டுப்பாட்டை மீறிச் செல்ல அவர் அனுமதித்ததால் ஒட்டுமொத்த தேசமும் கொதிப்படைந்துள்ளது. மேலும் இதுபோன்று மரணம் நிகழும் அழிவு நேரத்தில் அவரது மௌனம் வெட்கக்கேடானது" என பதிவிட்டுள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget