மேலும் அறிய

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்; காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி? அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்த சபாநாயகர்!

காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலர் திட்டம் தீட்டி இருந்தனர். காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் மக்களவை வரலாற்றில் இல்லாத சம்பவத்தை நிகழ்த்தத் திட்டமிட்டு இருந்தனர்- ஓம் பிர்லா

’’எதிர்க்கட்சி எம்.பி.க்களின் திட்டத்தை அறிந்தே பிரதமர் மோடியிடம் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அதேபோல நேற்று மக்களவையில் அவரைப் பேச வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தேன்’’ என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் குடியரசுத் தலைவர் தீர்மானத்துக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி இருந்தன. 

பிரதமர் மோடி பேசாதது ஏன்?

இந்த நிலையில், பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டதாகவும் அதனால்தான் பிரதமர் மோடி பேசவில்லை என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் பேசிய அவர், ’’நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் திட்டத்தை அறிந்தே பிரதமர் மோடியிடம் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அதேபோல நேற்று மக்களவையில் அவரைப் பேச வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தேன். 

 

காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலர் திட்டம் தீட்டி இருந்தனர். காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் மக்களவை வரலாற்றில் இல்லாத சம்பவத்தை நிகழ்த்தத் திட்டமிட்டு இருந்தனர். வேண்டுமென்றே பிரதமர் மோடியைப் பேசவிடாமல் தடுத்தனர்.

ஜனநாயக மரபுகளையே உடைத்திருக்கும்

குறிப்பாக பிரதமர் குடியரசுத் தலைவரின் உரைக்கு பதிலளிக்க வேண்டியிருந்தபோது,  காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் நாற்காலிக்கு அருகில் தகாத சம்பவத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்த தகவல் எனக்குக் கிடைத்தது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளையே உடைத்திருக்கும். இதைத் தடுக்கவே பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்" என்றும் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். காகிதங்கள், பேம்ப்ளெட்டுகளை எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கொண்டு வரக்கூடாது என்றும் கூறிய ஓம் பிர்லா, தொடர்ந்து மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். 

நாட்டின் பிரதமர் மீது எதிர்க் கட்சி பெண் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்ததாக, மக்களவை சபாநாயகரே குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Embed widget