மேலும் அறிய

Katchatheevu Row: ”எல்லாம் அவர்களுக்கு தெரிந்தே தாரை வார்க்கப்பட்டுள்ளது” - கச்சத்தீவு விவகாரத்தில் அமைச்சர் ஜெய்சங்கர்..

திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு தெரிந்தேதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சியின்போது, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவை தாரைவாத்து கொடுத்தது திமுக அரசு தான் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று பாஜக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “கடந்த 20 ஆண்டுகளில், 6184 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1175 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையால் கைப்பற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளன. நாம் விவாதிக்கும் பிரச்சனையின் பின்னணி இதுதான்.

நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அனுப்பப்பட்டுள்ளது. கச்சத்தீவு விவகாரம் எப்படி உருவானது என மக்களுக்கு தெரிய வேண்டும்.

இப்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இதைப் பற்றி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. காங்கிரஸ், திமுக என இரண்டு கட்சிகளும் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பதுபோல இந்த விஷயத்தை அணுகுகிறார்கள். இதனை மத்திய அரசு தீர்த்து வைக்கவேண்டிய சூழலில் இருந்தாலும், இந்த விவகாரம் இப்போதுதான் நடந்திருப்பதுபோலும், இவர்கள்தான் போராட்டம் நடத்துவதாகவும் பிம்பம் ஏற்பட்டுள்ளது.  மேலும் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்கும் ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் அதன் உரிமைகள் முற்றிலுமாக பறிக்கப்பட்டன.

ஆனால் கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. இந்த சிறு தீவு பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீண்ட காலம் இழுபறியில் இருக்கும் இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு எட்ட வேண்டும் என நேரு கூறியதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ”கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் முயற்சியால் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget