மேலும் அறிய

ரத்த சோகையா? இனி கவலை வேண்டாம்.. இளம் பெண்களே நோட் பண்ணுங்க.. ஆய்வில் சூப்பர் தகவல்!

வளரிளம் பருவத்து பெண்களிடையே சித்த மருந்துகளின் கலவை ரத்த சோகையைக் குறைக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொது சுகாதார திட்ட ஆராய்ச்சியாளர்களால் புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய அறிவு இதழில் (ஐ.ஜே.டி.கே) சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், "வளரிளம் பருவத்து பெண்களிடையே சித்த மருந்துகளின் கலவை ரத்த சோகையைக் குறைக்கிறது" என தெரிவிக்கப்பட்டது. 

பெண்களின் ரத்த சோகையை குறைக்கும் சித்த மருந்து:

ரத்த சோகையைக் குறைப்பதில் சித்த மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு சித்த மருந்து சிகிச்சையின் கலவையான அன்னபேதி செந்தூரம், பாவனக் கடுக்காய், மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்ட ஏபிஎன்எம், ரத்த சோகை உள்ள வளரிளம் பருவத்துப் பெண்களில் ஹீமோகுளோபின் மற்றும் பிசிவி-நிரம்பிய செல் அளவு, எம்சிவி-சராசரி கார்பஸ்குலர் ஹீமோகுளோபின் மற்றும் எம்சிஎச் -மீன் கார்பஸ்குலர் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்த ஆய்வில் 2,648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களில் 2,300 பேர் 45 நாள் நிலையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனை தொடங்குவதற்கு முன்பு, ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களுக்கு குடற்புழு நீக்கம் செய்தனர்.

45 நாள் சிகிச்சை கண்காணிப்பில் உள்ள அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அன்னபேதிசெந்தூரம், பாவண கடுக்காய், மாதுளை மணப்பாகு மற்றும் நெல்லிக்காய் லேகியம் (ஏபிஎம்என்) ஆகியவை வழங்கப்பட்டது. ஹீமோகுளோபின் மதிப்பீடு மற்றும் உயிர்வேதியியல் மதிப்பீடுகளுடன், மூச்சுத் திணறல், சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி, பசியின்மை மற்றும் வெளிர் நிறம் போன்ற மருத்துவ அம்சங்கள் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வில் வெளியான தகவல்:

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ரத்த சோகைக்கான கட்-ஆஃப் புள்ளி 11.9 mg/dl, ஹீமோகுளோபின் அளவு 8.0 mg/dl-க்குக் கீழே கடுமையானதாகவும், 8.0 முதல் 10.9 mg/dl வரை மிதமானதாகவும், 11.0 முதல் 11.9 mg/dl வரை லேசானது என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

சோர்வு, முடி உதிர்தல், தலைவலி, ஆர்வம் இழப்பு மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற ரத்த சோகையின் மருத்துவ அம்சங்களை ஏபிஎம்என் கணிசமாகக் குறைத்ததுடன், ரத்த சோகை உள்ள அனைத்து பெண்களிலும் ஹீமோகுளோபின் மற்றும் பி.சி.வி, எம்.சி.வி மற்றும் எம்.சி.எச் அளவை கணிசமாக மேம்படுத்தியது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஆய்வு முடிவுகளின் தாக்கம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர். மீனாகுமாரி, "ஆயுஷ் அமைச்சகத்தின் பொது சுகாதார முயற்சிகளில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

வளரிளம் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உணவு ஆலோசனை மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு மற்றும் சித்த மருந்துகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகள் ரத்த சோகை நோயாளிகளுக்கு பலன்களை அளித்தன" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
Seeman: கிங்டம் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது.. சீமானின் கோபத்திற்கு காரணம் என்ன?
Seeman: கிங்டம் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது.. சீமானின் கோபத்திற்கு காரணம் என்ன?
மிருணாள் தாகூருடன் தனுஷ் டேட்டிங்கா?.. சக்சஸ் பார்ட்டியில் ரகசியம் சொன்ன நடிகை.. வைரல் வீடியோ
மிருணாள் தாகூருடன் தனுஷ் டேட்டிங்கா?.. சக்சஸ் பார்ட்டியில் ரகசியம் சொன்ன நடிகை.. வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
Seeman: கிங்டம் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது.. சீமானின் கோபத்திற்கு காரணம் என்ன?
Seeman: கிங்டம் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது.. சீமானின் கோபத்திற்கு காரணம் என்ன?
மிருணாள் தாகூருடன் தனுஷ் டேட்டிங்கா?.. சக்சஸ் பார்ட்டியில் ரகசியம் சொன்ன நடிகை.. வைரல் வீடியோ
மிருணாள் தாகூருடன் தனுஷ் டேட்டிங்கா?.. சக்சஸ் பார்ட்டியில் ரகசியம் சொன்ன நடிகை.. வைரல் வீடியோ
அய்யய்யோ... 3 மகள்களும் வெட்டிக்கொலை.. தந்தை தற்கொலை - நாமக்கல்லில் நடந்தது என்ன?
அய்யய்யோ... 3 மகள்களும் வெட்டிக்கொலை.. தந்தை தற்கொலை - நாமக்கல்லில் நடந்தது என்ன?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2025): கேரள லாட்டரியில் இன்னிக்கு லக் யாருக்கு? 500 பேரின் கனவு நனவாகுமா?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2025): கேரள லாட்டரியில் இன்னிக்கு லக் யாருக்கு? 500 பேரின் கனவு நனவாகுமா?
TVK Vijay: 69,400 பூத் ஏஜெண்ட்கள்.. திமுக-வை ஆட்டிப்பார்க்க இவர்கள்தான் அஸ்திரம் - விஜய் ஸ்கெட்ச் கைகொடுக்குமா?
TVK Vijay: 69,400 பூத் ஏஜெண்ட்கள்.. திமுக-வை ஆட்டிப்பார்க்க இவர்கள்தான் அஸ்திரம் - விஜய் ஸ்கெட்ச் கைகொடுக்குமா?
Top 10 News Headlines: 3 மகள்களை வெட்டிக் கொன்ற தந்தை, விண்வெளி குப்பையை மீட்க சாதனம் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: 3 மகள்களை வெட்டிக் கொன்ற தந்தை, விண்வெளி குப்பையை மீட்க சாதனம் - 11 மணி செய்திகள்
Embed widget