Madhya Pradesh : ஒன்றாக விஷம் அருந்திய தோழிகள்..! 2 பேர் மரணம் - ஒருவர் கவலைக்கிடம்..! நடந்தது என்ன..?
இந்தூர்: செஹோர் பகுதியை சேர்ந்த மூன்று சிறுமிகள் 'நட்பு' பிரச்சனையால் விஷம் அருந்தி, இருவர் உயிரிழந்தனர். மூன்று பேரும் வெவ்வேறு காரணத்தால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்ச்சித்தனர்.
இந்தூர்: செஹோர் பகுதியை சேர்ந்த மூன்று சிறுமிகள் 'நட்பு' பிரச்சனையால் விஷம் அருந்தி, இருவர் உயிரிழந்தனர். மூன்று பேரும் வெவ்வேறு காரணத்தால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர்.
ஒருவர் ஆண் நண்பர் பேச மறுத்ததால் விஷம் அருந்தினார். வேறு ஒருவர் குடும்பத்தில் நிலவும் பிரச்சினை காரணமாகவும், கடைசி பெண் தன் இரு தோழியும் விஷம் அருந்தியதால் வருத்தமடைந்து அவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்தார்.
இந்தூர் (மத்தியப் பிரதேசம்): செஹோரைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்புப் பெண், தனது ‘நண்பரை’ சந்திப்பதற்காக தனது இரண்டு வகுப்பு தோழர்களுடன் இந்தூருக்குப் பயணம் செய்தார். பன்வர்குவானில் உள்ள ஒரு தோட்டத்தில் நடந்த சந்திப்பு சிறுமியின் விருப்பப்படி நடக்கவில்லை.
எனவே அவர் செல்போஸ் (celphos) என்ற மாத்திரைகளை உட்கொண்டார். அந்த சிறுமியின் நண்பர்களில் ஒருவர் தனது குடும்பத்தில் சண்டைகள் நிலவி வந்ததால் மனமுடைந்து அதே மாத்திரயை உட்கொண்டார். மூன்றாவது சிறுமி மரணத்திலும் தனது இரண்டு தோழிகளுடன் ஒன்றாக இருக்க முடிவு செய்து, தன் இரு தோழிகளும் இந்த முடிவு எடுத்ததால் வருத்தப்பட்டு அவரும் அதே மாத்திரையை உட்கொண்டார்.
சிகிச்சையின் போது இருவர் இறந்த நிலையில், மூன்றாவது நபர் கடைசி வரை உயிருக்கு போராடி வருகிறார். மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன், மூவரும் தங்கள் கைகளில் செல்போஸ் மாத்திரைகளை வீடியோ எடுத்தனர். பன்வர்குவான் காவல் நிலையப் பொறுப்பாளர் ஷஷிகாந்த் சௌராசியா கூறுகையில், செஹோர் மாவட்டத்தில் உள்ள பாலக், பூஜா மற்றும் ஆர்த்தி என்ற சிறுமிகள் பெற்றோருக்குத் தெரிவிக்காமல் பேருந்தில் ஊருக்குச் சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இந்தூரை அடைந்த பிறகு, சிறுமிகளில் ஒருவர் தனது 'நண்பரிடம்' பலமுறை பேச முயன்றது தெரியவந்தது.
அவர் மறுத்ததால், அவர் பன்வர்குவானில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்தார். அவர் விஷம் குடிப்பதைப் பார்த்ததும், அவரது தோழிகளும் அதையே பின்பற்றி விஷம் அருந்தினர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு பாலக் மற்றும் பூஜா வெள்ளிக்கிழமை இரவு இறந்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுமி ஒருவர் மனமுடைந்து விஷம் அருந்தியதாக போலீசார் தெரிவித்தனர். தனது இரண்டு நண்பர்கள் விஷம் அருந்துவதைக் கண்டு மனமுடைந்த மூன்றாவது தோழி விஷம் அருந்தினார். இருப்பினும் ஆர்த்தியின் வாக்குமூலத்தை பெற போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
மேலும் அவர்களது பெற்றோரிடம் இருந்தும் தகவல் கேட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை, சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், ராஜேந்திர நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் சிறுமிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்ய மருத்துவமனைக்கு வந்தார். எனினும், சம்பவம் பன்வர்குவான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதை அறிந்ததும், அவர் அதற்குத் தகவல் தெரிவித்தார்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
கோடி கணக்கில் கடத்தப்பட்ட போதை பொருள்...அதிர்ந்து போன ஒடிசா...
இந்தியாவில் கிடைக்கும் பிரபலமான பிரியாணிகள் !
உங்க வீடு எங்க இருக்கு? - நீதிபதியிடம் கேள்வி கேட்ட காவல்துறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்!