Watch Video: பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்... ஒருவர் பலி...பலர் படுகாயம்..அதிர்ச்சி காட்சிகள்!
கோபமடைந்த கும்பல் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதல்கான் காவல்நிலையத்தை முற்றுகையிட்டது. மேலும் இறந்தவரின் உடலை வைத்து கும்லா-கட்னி தேசிய நெடுஞ்சாலையை அடைத்தனர்.
சத்தீஸ்கரில் தசரா பண்டிகையை முன்னிட்டு ஊர்வலமாக சென்ற பக்தர்கள் மீது வேகமாக ஒரு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி காண்போரை கதிகலங்க செய்துள்ளது.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஜஷ்பூரில் உள்ள பதல்கானில் நடந்தேறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, கோபமடைந்த கும்பல் காரை தீ வைத்து கொளுத்தியுள்ளது. இந்த காரில் கஞ்சா நிரப்பப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது, மக்கள் 7 துர்கா பந்தல்களின் சிலைகளை ஆற்றங்கரையில் மூழ்கடிப்பதற்காக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தில் ஈடுபட்டவர் மீது கார் மோதியால் விபத்து ஏற்பட்டது. 100 முதல் 120 கிமீ வரை வேகத்தில் வந்த பக்தர்கள் மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.
Scary Visuals From Jashpur Chhattisgarh- A speeding vehicle rams into a group of people , several injured #ACCIDENT pic.twitter.com/5fHfORXRUo
— Utkarsh Singh (@utkarshs88) October 15, 2021
கோபமடைந்த கும்பல் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதல்கான் காவல்நிலையத்தை முற்றுகையிட்டது. மேலும் இறந்தவரின் உடலை வைத்து கும்லா-கட்னி தேசிய நெடுஞ்சாலையை அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 21 வயது பாப்லு விஸ்வகர்மா மற்றும் 26 வயது சிசுபால் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஜஷ்பூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
जशपुर की घटना बहुत दुखद और हृदयविदारक है।
— Bhupesh Baghel (@bhupeshbaghel) October 15, 2021
दोषियों को तुरंत गिरफ्तार कर लिया गया है। प्रथमदृष्टया दोषी दिख रहे पुलिस अधिकारियों पर भी कार्रवाई हुई है।
जांच के आदेश दिए गए हैं। कोई भी बख्शा नहीं जाएगा।
सबके साथ न्याय होगा।
ईश्वर दिवंगतजनों की आत्मा को शांति दे।
இந்தச் சம்பவத்துக்குப் பதிலளித்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜஷ்பூர் சம்பவம் மிகவும் சோகமாகவும், மனதை வருத்தமடையச் செய்கிறது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். முதல் நிலை குற்றவாளியாக தோன்றிய போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள். நீதி கிடைக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்