Today Headlines | பக்ரீத் பண்டிகை.. கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் சில..

24 நாட்களில் 10 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் - பிரதமரின் நாடாளுமன்றக் கட்சிக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி
பிரதமரின் நாடாளுமன்றக் கட்சிக்கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட 6 கட்சிகள் புறக்கணிப்பு - கொரோனா விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தல்
இந்திய மீன்வள கடல்சார் மசோதா 2021ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாமென பிரதமருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்
2030க்குள் 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் ஜிடிபி இலக்கு - முதலமைச்சர் ஸ்டாலின்
இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து.
பக்ரீத் இன்று கொண்டாட்டம் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து
பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆணையம், முதலமைச்சரிடன் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது.
4 மாவட்ட கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழத்துடன் இணைப்பு; இணைப்பு பல்கலைக்கழமாக மாற்றப்படும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
நாமக்கலில் ஆபத்தான முறையில் நீர்தேக்கத் தொட்டி மீது ஏறும் மாணவர்கள் - ஆன்லைன் வகுப்புக்கு டவர் பிரச்னை என குற்றச்சாட்டு
தேனி பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கு பின் 3ம் போக அறுவடை - விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1904 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது- கொரோனாவுக்கு நேற்று மட்டும் 30 பேர் பலி
மேட்டூர் வரத்துக்கு நீர்வரத்து மணிக்கு 16ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரிப்பு - நீர்மட்டம் 73 அடியாக உயர்வு
ரேசன் கடைகளில் பணியாளர்களைத் தவிர வெளி நபர்கள் யாருக்கும் இருக்கக் கூடாது; மீறினால் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
சுதந்திர தினக்கு முன்பு ஆளில்லா விமானம் மூலம் டெல்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை; கண்காணிப்பு தீவிரம்
பஞ்சாபில் காங்கிரஸ் உட்கட்சி மோதல் உச்சக்கட்டம்; சந்திப்பை தவிர்க்கும் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து - முதலமைச்சர் அம்ரிந்தர்
கொரோனா இரண்டால் அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை - மாநிலங்களைவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த விண்கலம்- வெற்றிகரமாக விண்வெளி சுற்றுலா சென்று திரும்பிய அமேசான் முன்னாள் தலைவர் ஹெப் பெசோஸ்; பத்திரமாக பூமி திரும்பினார்
அமெரிக்காவை அச்சுறுத்தும் காட்டுத்தீ - வறண்ட காற்று வீசுவதால் சிக்கல்
காபூல் ஆப்கன் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் குண்டு வீச்சு - பயங்கரவாதிகள் தாக்குதல் - உயிர் தப்பிய அதிபர்
ஒலிம்பிக் போட்டிக்காக சென்றவர்கள் இதுவரை 67 பேருக்கு கொரோனா - கடைசி நேரத்திலும் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு
கொழும்பு ஒருநாள் போட்டி - இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா. டெயில் எண்டராக களமிறங்கிய தீபக் சஹார், 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.





















