மேலும் அறிய

Chandrayaan 3 Rover: நிலவில் பள்ளம்.. சுதாரித்து கொண்டு புதிய பாதையில் பயணத்தை தொடங்கும் ரோவர்..

லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர், நிலவில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளம் தென்பட்டதாகவும் அப்போது,  சுதாரித்து கொண்ட ரோவர், புதிய பாதையில் பயணத்தை தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 

இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இஸ்ரோ:

நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தில் பல கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை தெரிந்து கொள்வதற்காக ChaSTE கருவியும் தரையிறங்கும் இடத்தை சுற்றி நில அதிர்வு தொடர்பாக ஆராய்வதற்காக ILSA கருவியும் மின் திறன் கொண்ட துகள்களை பற்றி ஆராய LP கருவியும் விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்டுள்ளன.

அனுப்பப்பட்ட கருவிகளின் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு வரும் நிலையில், இன்று முக்கிய தகவல் ஒன்றை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர், அங்கு பயணித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளம் தென்பட்டதாகவும் அப்போது,  சுதாரித்து கொண்ட ரோவர், புதிய பாதையில் பயணத்தை தொடங்கி இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சவாலை சமாளித்து வெற்றிநடைபோடும் சந்திரயான் 3:

இதுதொடர்பாக எக்ஸ் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) சமூக வலைதள பக்கத்தில், " நிலவில் ரோவர் செல்லும் பாதையில் 4 மீட்டர் விட்டத்திற்கு பள்ளம் ஒன்று தென்பட்டுள்ளது. 3 மீட்டர் தொலைவுக்கு முன்பே ரோவர், இதை கண்டறிந்துள்ளது. எனவே, பழைய பாதையில் செல்ல கமாண்ட் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, ரோவர் புதிய பாதையில் பயணத்தை தொடங்கி இருக்கிறது" என இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பல்வேறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். அப்போது நிலவில் உள்ள நீராதாரம்,  கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளன. 

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget