மேலும் அறிய

Chandrayaan 3 Live Streaming Record: விண்வெளி ஆராய்ச்சியில் மட்டும் அல்ல ..யூடியூபிலும் சாதனை படைத்த சந்திரயான் 3 ..உலகை திரும்பி பார்க்க வைத்த அந்த தருணம்

உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்த சந்திரயான் 3 திட்டம், விண்வெளி ஆராய்ச்சியில் மட்டும் அல்ல யூடியூபிலும் பெரும் சாதனையை படைத்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி 
விண்ணில் செலுத்தப்பட்டது. 40 நாட்கள் பயண திட்டத்தின்படி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள  விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.

யூடியூபிலும் சாதனை படைத்த சந்திரயான் 3:

இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு லேண்டரை இஸ்ரோ தரையிறக்கியது. சந்திரயான் 3 திட்டத்தின் மிக முக்கிய கட்டமான இந்த தரையிறக்குதல் நிகழ்வானது, மொத்தம் 8 கட்டடங்களாக நடைபெற்றது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்த சந்திரயான் 3 திட்டம், விண்வெளி ஆராய்ச்சியில் மட்டும் அல்ல யூடியூபிலும் பெரும் சாதனையை படைத்துள்ளது.

சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்குவதை யூடியூப் லைவில் மட்டும் 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். இதற்கு முன்பு, ஸ்பேயின் நாட்டின் ஐபாய் யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லைவை 34 லட்சம் பேர் பார்த்திருந்தனர். இதுவே உலக சாதனையாக இருந்தது. தற்போது, சந்திரயான் 3 லைவை 36 லட்த்திற்கும் மேற்பட்டோர் பார்த்ததன் மூலம் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

வரலாற்றில் தடம் பதித்த இந்தியா:

முன்னதாக, நான்கு என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறக்குவதற்காக கடைசி 30 கிமீ தொலைவில் இரண்டு என்ஜின்களை துண்டித்தது.

இதற்கு முன்னதாக, மூன்று நாடுகள் மட்டுமே நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துள்ளது. அமெரிக்க, சோவியத் ஒன்றியம் (தற்போது ரஷியா), சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து அந்த பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. இந்தியாவின் சாதனைக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோ:

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "இந்த சாதனைக்காக இஸ்ரோ, அதன் விஞ்ஞானிகளை மனதார வாழ்த்துகிறேன். நான் தென்னாப்பிரிக்காவில் இருக்கலாம். ஆனால், என் இதயம் எப்போதும் சந்திரயான் திட்டத்துடன்தான் இருக்கிறது. இது, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் கிடைத்த வெற்றி. நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் அடுத்தகட்டத் திட்டம். சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும்'' என்றார்.

சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் வகையில் ஆதித்யா எல்1 திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் வெள்ளிக்கு விண்கலம் அனுப்பும் திட்டமும் இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் கூறுகையில், "நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.இந்த தருணத்திற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஸ்பேம் கால்களுக்கு செக்.. டிராய் எடுத்த அதிரடி நடவடிக்கை! முழு விவரம்
ஸ்பேம் கால்களுக்கு செக்.. டிராய் எடுத்த அதிரடி நடவடிக்கை! முழு விவரம்
Bengaluru power cut: பெங்களூருவில் மின் தடைக்கு முற்றுப்புள்ளி! மாணவர்களுக்காக பெஸ்கமின் அதிரடி முடிவு!
Bengaluru power cut: பெங்களூருவில் மின் தடைக்கு முற்றுப்புள்ளி! மாணவர்களுக்காக பெஸ்கமின் அதிரடி முடிவு!
சபரிமலை: 2026-ல் இறுதி தீர்ப்பு! பெண்களின் தரிசனம் குறித்த கேரள அரசின் திடீர் முடிவு! பரபரப்பு!
சபரிமலை: 2026-ல் இறுதி தீர்ப்பு! பெண்களின் தரிசனம் குறித்த கேரள அரசின் திடீர் முடிவு! பரபரப்பு!
Top 10 News Headlines: சரிந்த தங்கம் விலை, இந்தியாவில் X அதிரடி, ஈரான் பகிரங்க மிரட்டல், ட்ரம்ப்பை எச்சரித்த பென்டகன் - 11 மணி செய்திகள்
சரிந்த தங்கம் விலை, இந்தியாவில் X அதிரடி, ஈரான் பகிரங்க மிரட்டல், ட்ரம்ப்பை எச்சரித்த பென்டகன் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget