மேலும் அறிய

Chandrayaan 3 Travel: ”3-வது கட்டமும் சக்ஸஸ், அடுத்த 19 நாள் இதுதான் வேலை” .. கச்சிதமாக முன்னேறும் சந்திரயான் 3 விண்கலம்

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், முதல் சுற்றுப்பாதையை உயர்ந்தும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், முதல் சுற்றுப்பாதையை உயர்ந்தும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான் 3 விண்கலம்:

கடந்த 2019ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் தோல்வியின் மூலம் கிடைத்த படிப்பினைகளை கொண்டு 4 ஆண்டுகால முயற்சிகளுக்குப் பிறகு, சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து  ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக 10 கட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் எல்.வி.எம் 3 ராக்கெட் பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோமீட்டர் உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிலைநிறுத்தியது தான் முதற்கட்டம். அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

3வது கட்டத்தில் வெற்றிகரமான தொடக்கம்:

இரண்டாம் கட்டமாக, விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றதும், அதற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டு புவியின் நீளவட்டப்பாதையில் சுற்ற வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான், விண்கலத்தை நிலவிற்கு அருகில் கொண்டு செல்ல பூமிக்கு நெருக்கமான தூரத்தில் இருந்து நெடுந்தொலைவிற்கு செல்ல உந்துதல் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சுற்றுவட்டப்பாதையில் பூமிக்கு 170 கிலோமீட்டர் தூரத்தை விண்கலம் அடையும்போதெல்லாம் உந்துதல் சக்தி கொடுக்கப்பட்டு நிலவை நோக்கி தள்ளிவிடப்படும். இந்த மூன்றாவது கட்டத்தின், முதல் முயற்சி தான் தற்போது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்த 19 நாட்களுக்கு இந்த பணி தொடரும்.

இஸ்ரோ அறிவிப்பு:

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் இப்போது 41,762 கி.மீ. x 173 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

மீதமுள்ள 7 கட்டங்கள்:

  • அடுத்ததாக, பூமிக்கும், நிலவுக்கும் இடையே சம ஈர்ப்பு விசைப் புள்ளி, நிலவில் இருந்து சுமார் 62 ஆயிரத்து 630 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்தப் புள்ளிக்கு சந்திரயான் 3 விண்கலத்தை நகர்த்துவது தான் நான்காவது கட்டம்.
  • அடுத்தகட்டமாக சம ஈர்ப்புவிசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி மாறாமல் இருக்க, அந்தப் பிசிறுகளைச் சரிசெய்துகொண்டே இருப்பது தான் ஐந்தாவது கட்டம். இதனை மிகவும் துல்லியமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்
  • சம ஈர்ப்பு விசை புள்ளிக்குச் சென்ற விண்கலம் புவியின் ஈர்ப்புவிசைப் பிடியிலிருந்து விடுபட்டு, நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் செல்ல உந்துதல் கொடுக்கப்படுவது ஆறாவது கட்டம்.
  • நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் வந்த பிறகு சந்திரயான் 3 விண்கலனை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும் என்பது ஏழாவது கட்டம்
  • விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையின் உயரத்தை சிறிது சிறிதாக குறைத்து, நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் விண்கலத்தைக் கொண்டு வந்து நிலைநிறுத்துவதோடு, அதே தொலைவில் நிலவை சுற்ற வைப்பது எட்டாவது கட்டம்.
  • ஒன்பதாவது கட்ட செயல்முறை என்பது வெறும் 15 நிமிடங்களில் நிகழ்த்தப்பட உள்ளது. அந்த பதினைந்து நிமிடங்கள் தான் சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளது. விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என்ற இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில் தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியையும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இவை அனைத்தும் வெறும் 15 நிமிடங்களில் நிகழ வேண்டும்.
  • இறுதிக்கட்டமாக, நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று கீழ்நோக்கி சரியும். அந்த சாய்வுப் பலகையின் வழியே ரோவர் பயணித்து நிலவில் தடம் பதிக்கும். தொடர்ந்து பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது தான் சந்திரயானின் 10வது கட்டமாகும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Embed widget