மேலும் அறிய

Aadhar Pan Link: ஆதார்கார்டுடன் பான் கார்டை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30-ந் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.

மத்திய அரசு இந்திய குடிமக்களுக்கு வழங்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு உள்ளது. தொழில்புரிவோர் மற்றும் பணிபுரிபவர்களுக்கு முக்கிய ஆவணமாக பான்கார்டு உள்ளது. மத்திய அரசு பான்கார்டு மற்றும் ஆதார்கார்டை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கான அவகாசம் மார்ச் 31-ந் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது வரும் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

Aadhar Pan Link: ஆதார்கார்டுடன் பான் கார்டை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு

ஆதார் - பான் கார்டு இணைப்பதற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்த நிலையில், போர்டல் பிஸியாக இருந்தது. இதனால், கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், இதற்கான கால அவகாசத்தை நீடித்துள்ளது.

Aadhar Pan Link: ஆதார்கார்டுடன் பான் கார்டை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு

பான் -ஆதார் இணைப்பு

நாடு முழுவதும் தனித்த அடையாள அட்டை நடைமுறையை வழக்கமாக்க ஆதார் எண் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 2020-ஆம் ஆண்டு பான்கார்டு, ஆதார் கார்டு இரண்டையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.2021-ஆம் மார்ச்,31 கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டது. 

கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக பான் - ஆதார் இணைப்பிற்கான கால அவகாசம் இம்மாதம் (மார்ச்) 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் பலரும் பான் - ஆதார் இணைக்க முயற்சி செய்தனர். இதனால் போர்டல் ஸ்லோ டவுன் ஆனது.இதையெடுத்து, பான் - ஆதார்  இணைப்பிற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கிய காலக்கெடுவுக்குள் ஆதார், பான் எண்ணை இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும். மேலும், அரசு சார்ந்த பண பரிவர்த்தனைக்கு வங்கிகளில் பான் கார்டை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் அதனால் வரும் சட்ட நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும். எனவே பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது மிகவும் அவசியம்.

பான் - ஆதார் எண் இணைப்பதன் அவசியம் என்ன?

வருமானவரித்துறையின் தரவுகளின்படி பல போலியான பான் கார்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தடுப்பதற்கு, வருமானவரித்துறை பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைப்பதை கட்டாயமாக்கியது.  அதன்படி பான்கார்டு உடன் ஆதார் கார்டு இணைக்கபடவில்லை என்றால் அந்த பான் கார்டு செல்லாமல் போகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வருமான வரித்துறை / வங்கி நிர்ணயித்துள்ள ஒரு குறிபிட்ட அளவிற்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் போது பான் கார்டு கட்டாயம் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கோடு இணைத்திருக்க வேண்டும். வங்கியில் கணக்கு வைத்திருக்க பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.னவே ஆகவே பான் கார்டு உடன் ஆதாரை இணை வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. 

எப்படி இணைக்க வேண்டும்?

  • ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in-என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
  • அந்த பக்கத்தில் ’Link Aadhaar’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.
  • ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும் தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.
  • விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்
  • இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்.

பான்-ஆதார் இணைக்கப்பட்டதா என பரிசோதிப்பது எப்படி?

ww.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar -என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
அதில் பான் எண், பிறந்ததேதி, குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும் இறுதியாக சப்மிட் பட்டனை கிளிக் செய்தால், இணைப்பு குறித்த செய்தி வரும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
A R Rahman : ரஹ்மான் என் தந்தை மாதிரி...வதந்திகள் பற்றி மெளனம் கலைத்த மோகினி
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
Embed widget