மேலும் அறிய

CBSE Date Sheet 2023: 2023 சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது?: காத்திருக்கும் மாணவர்கள்..

2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ வாரியத்தின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ வாரியத்தின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு,  மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிவித்தது.

2 பருவத் தேர்வுகள்

புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 

இந்த நிலையில், 2022- 23ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது. இந்தத் தேர்வு ஒரே கட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15 முதல் இந்தத் தேர்வுகள் தொடங்குகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை 34 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 18 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவர். 12ஆம் வகுப்பில் இருந்து 16 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 

தேர்வு அட்டவணை பற்றிய தகவல்களுக்கு, மாணவர்கள் cbse.gov.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களைக் காண வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

மாநில வாரியத் தேர்வுகள் எப்போது?

தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியம் சார்பில் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர். 11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். 

இந்த நிலையில் இதுவரை சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் வெளியாகவில்லை. கல்லூரி நுழைவுத் தேர்வுகளான நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்டவற்றுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ விரைந்து தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
இந்தியாவில் முதல் முறையாக சபரிமலையில் ஒருங்கிணைந்த AI கூட்ட மேலாண்மை? முழு விவரம் இங்கே..
இந்தியாவில் முதல் முறையாக சபரிமலையில் ஒருங்கிணைந்த AI கூட்ட மேலாண்மை? முழு விவரம் இங்கே..
Top 10 News Headlines: சட்டமன்றத்தில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்.. சென்னை வரும் பிரதமர் மோடி.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: சட்டமன்றத்தில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்.. சென்னை வரும் பிரதமர் மோடி.. 11 மணி செய்திகள் இதோ!
டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
iPhone 17 Discount: மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
Redmi Turbo 5 Review: எவ்ளோ அடிச்சாலும் அசராத பேட்டரி.! ரெட்மி டர்போ 5 எப்படி இருக்கு.? வாங்கலாமா.? இதோ ரிவ்யூவ்
எவ்ளோ அடிச்சாலும் அசராத பேட்டரி.! ரெட்மி டர்போ 5 எப்படி இருக்கு.? வாங்கலாமா.? இதோ ரிவ்யூவ்
Embed widget