மேலும் அறிய

இனி U/A கிடையாது.. சினிமாவுக்கு குழந்தைகளை கூட்டிட்டு போறீங்களா.. இதை தெரிஞ்சுட்டு போங்க!

புதிய மாற்றத்தை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கொண்டு வந்துள்ளது. “யூ”, “ஏ”, “யூஏ7+”, “யூஏ 13+”, “யூஏ 16+” என்னும் பிரிவுகளில் திரைப்படங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

இதுவரை திரைப்படங்களை “யூ”, “ஏ” மற்றும் “யூஏ” ஆகிய பிரிவுகளில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) வகைப்படுத்தி வந்தது. இதன் அடிப்படையில்தான், திரைப்படங்களை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. 

எந்த திரைப்படங்களை யார் பார்க்கலாம்?

மாறி வரும் சூழலை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் திரைப்படங்களை வகைப்படுத்துவதில் பெரிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, “யூ”, “ஏ”, “யூஏ7+”, “யூஏ 13+”, “யூஏ 16+” என்னும் பிரிவுகளில் திரைப்படங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

இதில் “யூ” வகை திரைப்படங்கள் எல்லா வயதினருக்கும் உகந்தவையாகும். “ஏ” வகையில் அனுமதிக்கப்படும் படங்கள் 18 வயது கடந்தவர்கள் மட்டுமே காண்பதற்கு அனுமதிக்கப்படுகின்றன. அதற்குக் குறைவான வயதுடையவர்கள் காண அனுமதி இல்லை.

இதையும் படிக்க: CM Stalin: ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் முதல்வர் பெருமிதப் பேச்சு!

திரைப்படங்களில் குழந்தைகளுக்கு ஒவ்வாத வன்முறை/ பயமுறுத்தும் காட்சி அமைப்புகள், நெருக்கமான அல்லது கிளர்ச்சியூட்டும் காட்சிகள், அடிமைப்படுத்தும் பழக்கங்கள், விபரீதமான நடத்தைகள் போன்ற அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அவை பார்வையாளர் மேல் உண்டாக்கும் தாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை 7, 13, 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உகந்ததாக “யூஏ7+”, “யூஏ 13+”, “யூஏ 16+” என வகைப்படுத்தப்படும்.

மாற்றத்தை கொண்டு வந்த CBFC:

“யூஏ7+”, “யூஏ 13+”, “யூஏ 16+” என்று பரிந்துரைக்கப்படும் திரைப்படங்களில், தங்கள் குழந்தைகளின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு பரிந்துரைக்கப்பட்ட வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் அந்த திரைப்படத்தை பார்க்க அனுமதிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் முன் அத்திரைப்படத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எந்தவொரு திரைப்படத்தின் சான்றிதழ் (வயது மதிப்பீடு) விவரங்களை அறிய, பெற்றோர்கள் cbfcindia.gov.in என்ற இணையதளத்தைப்  பார்வையிடவும், பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உகந்த வயதினருக்கு அவர்களுக்கான திரைப்படங்களை பரிந்துரைக்க இந்தப் புதிய மாற்றம் வாரியத்திற்கு உதவியாக அமைய உள்ளது. பெற்றோர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வன்முறை மிக்க, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான படங்களை பார்க்க குழந்தைகள் அனுமதிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இந்த புது மாற்றத்தை கொண்டு வந்துள்ளது மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

''லஞ்சம் ஊழல் NO EXCUSE'' சாட்டை சுழற்றும் விஜய் அதிகாரிகள் 6 பேர் SUSPEND
”ஊழல் பண்ண பதவி காலி” CM விஜய் வார்னிங்! பதறும் தவெக அமைச்சர்கள்
”வெயில்ல நிக்காம போறாரு” கேள்வி கேட்ட பொதுமக்கள் ESCAPE ஆன அமைச்சர் ஸ்ரீநாத்!
Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget